டெல்லி மத கலவரத்தின் போது வெறுப்பு பேச்சு.. இன்று விசாரணை நடத்தும் டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: டெல்லியில் மத கலவரத்தை தூண்டிவிடும்படி பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் குவிந்துள்ள ஏராளமான மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினர் இந்திய குடியுரிமைக் கோரி விண்ணப்பிக்கலாம் என்பதே இந்த சட்டமாகும்.

இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி, கிறிஸ்தவர்கள் ஆகியவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. இதில் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் இடம்பெறாததால் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா உள்ளிட்டோர் வெறுப்பு பேச்சுகளை பேசினர்.
இதனால் பிப்ரவரி மாதம்23 ஆம் தேதி , 2019 -இல் வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டு 53 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அது போல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் கலவரத்திற்கு முன்னதாக வெறுப்பு பேச்சு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத கலவரத்தை தூண்டிவிட்டதாக மிஸ்ரா மற்றும் தாக்கூருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் சார்பில் மனித உரிமைகள் சட்ட அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்ய மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மாணவர் அமைப்பை சேர்ந்த உமர் காலித்தை போலீஸார் கைது செய்தனர்.
9 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவத்ஸவாவிற்கு கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளனர். அதில் உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு போராட்டக்காரர்கள் தண்டிக்கப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிலையில் மேற்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications