கோவாக்சின் தடுப்பூசி.. டெல்லி முதலிடம்.. 5 வடகிழக்கு மாநிலங்களூக்கு ஒரு டோஸ் கூட கிடைக்கவில்லை
டெல்லி :நாட்டிலேயே அதிக சதவீத கோவாக்சின் தடுப்பூசிகளை டெல்லி பெற்றுள்ளது. ஆனால் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரு டோஸ் கூட கிடைக்கவில்லை.
நாட்டில் எத்தனை கோவாக்சின் மருந்துகள் நிர்வகிக்கப்படுகின்றன? கோவாக்சின் தடுப்பூசிகளில் எந்த மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன? எந்த அளவிற்கு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் கோவின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் உள்ள தகவலின் படி. ஜூன் 30 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு 3,61,35,097 கொடுக்ககப்பட்டுள்ளது. இது இதுவரை வழங்கப்பட்ட மொத்த அளவுகளில் 12 சதவீதத்திற்கும் சற்று அதிகம் ஆகும். ஏனெனில். நாட்டில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் பெரும்பாலானவை கோவிஷீல்ட் (28,96,05,38) ஆகும்.இதுவரை 84,605 ஸ்பூட்னிக் வி அளவுகள் மட்டுமே வழங்கப்பட்டன.

ஐந்து மாநிலங்கள்
இது ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அசாம் மற்றும் திரிபுராவைத் தவிர, இதுவரை அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் கூட போய் சேரவில்லை. அந்தமான் மற்றும் நிக்கோபார், சண்டிகர், டாமன் மற்றும் டியு, லட்சத்தீவு மற்றும் லடாக் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் இதே மாதிரியான ஒரு நிலை தான் இருந்தது.

டெல்லி முதலிடம்
தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் 12 டோஸ்கள் மற்றும் புதுச்சேரியில் 72 டோஸ்கள் என்கிற அளவில் மட்டுமே கோவாக்சின் வழங்கப்பட்டன. இருப்பினும், எந்தவொரு மாநில அல்லது யூனியன் பிரதேசத்தையும் விட டெல்லியில் அதிகமான கோவாக்சின் அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கையில் என்று கூறவிட முடியாது. சதவீத அடிப்படையிலான புள்ளிவிவரங்களில் கூறலாம். டெல்லியில் போடப்பட்ட மொத்த தடுப்பூசி அளவுகளில் 26 சதவீதத்திற்கும் அதிகமானவை கோவாக்சின் ஆகும்.

2வது இடம்
தெலுங்கானா (17.91 சதவீதம்), தமிழ்நாடு (16.74 சதவீதம்), அஸ்ஸாம் (16.61 சதவீதம்), ஜார்க்கண்ட் (16.57 சதவீதம்), ஆந்திரா (15.65 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் மட்டுமே 15 சதவீதத்திற்கும் அதிகமான கோவாக்சின் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி உள்ளன. கோவா (2.01%), ஜம்மு-காஷ்மீர் (2.61%) திரிபுரா (1.46%), சத்தீஸ்கர் (7.30%) மற்றும் கேரளா (8.69%) ஆகிய மாநிலங்களில் கோவாக்சின் அளவு ஒற்றை இலக்கங்களில் இருந்தது

அதிக தடுப்பூசி
முழுமையான எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கி நாட்டின் முதல் மாநிலமான மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் தான் நாட்டிலேயே அதிகமாக 37,52,758 கோவாக்சின் டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 30,53,346 டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டுடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தாமதமாகவே உற்பத்தியை தொடங்கியது குறைவான அளவு மக்களுக்கு கிடைக்க இன்னொரு காரணம் ஏப்ரல் மாதத்தில் கோவாக்சின் தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து.

மத்திய அரசு விருப்பம்
மே 20 அன்று, பாரத் பயோடெக்கின் இணை இயக்குனர் சுசித்ரா எல்லா, நிறுவனம் தனது தடுப்பூசி திறனை ஒரு மாதத்திற்கு 17 மில்லியன் அளவுகளால் அதிகரிக்கும் என்று கூறினார். ஹைதராபாத் மற்றும் பெங்களூரு வசதிகளைத் தவிர, குஜராத்தில் உள்ள ரேபிஸ் தடுப்பூசி நிலையத்தில் கூடுதல் கோவாக்சின் அளவை உற்பத்தி செய்யப்போவதாக கூறியிருந்தார். அதே நேரத்தில் தான் அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா , நவம்பர் மாதத்தில் கோவாக்சின் உற்பத்தியை மே மாதத்தில் 30 மில்லியன் டோஸிலிருந்து 135 மில்லியன் டோஸாக உயர்த்த வேண்டும் என்று அரசு விரும்புவதாக கூறியிருந்தார்.
Recommended Video

என்னென்ன நிறுவனங்கள்
இந்நிலையில் கோவிட் -19 தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக்கின் திறனை அதிகரிக்க குறைந்தது நான்கு உற்பத்தியாளர்கள் முன் வந்துள்ளனர். அவை மகாராஷ்டிராவின் ஹாஃப்கைன் பயோஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன், மத்திய அரசின் பாரத் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் கழகம், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் ஆம்னிபிஆர்எக்ஸ் பயோடெக்னாலஜிஸ், ஹெஸ்டர் பயோ சயின்சஸ் மற்றும் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் கூட்டமைப்பு ஆகும்.

ஆன்டிபாடி உற்பத்தி
புதிய கோவிட் வகைகளுக்கு எதிராக கோவாக்சினின் செயல்திறன் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) விஞ்ஞானிகள் சமீபத்திய ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு பற்றி, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்) கூறும் போது, பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி, கொரோனா வைரஸின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளுக்கு எதிராக செயல்படுகிறது. தடுப்பூசி முறையே இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட பி 1.1.7 (ஆல்பா) மற்றும் பி .1.617 (டெல்டா) வகைகளுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என்று இரண்டு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று தெரிவித்திருந்தது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications