ஓஸ் பைப்பை கையில் பிடித்தபடி.. யமுனையில் ஓர் "செல்லூர் ராஜு".. பொங்கும் நுரைகள்.. தெறிக்கும் மீம்ஸ்
யமுனை ஆற்றில் ரசாயன நுரையை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்
டெல்லி: யமுனை ஆற்றில் பெருக்கெடுத்துள்ள ரசாயன நுரையை, டெல்லி நீர் வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளனர்... அதேசமயம், இந்த முயற்சி குறித்த பல்வேறு விமர்சனங்களும், அதையொட்டிய மீம்ஸ்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று சாத் பூஜை... தொழிற்சாலை கழிவுநீரால் யமுனை நதி மாசுபடுவதால், டெல்லியில் வசிப்பவர்கள் சத் பூஜையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சாத் தினத்தன்று நதி அல்லது குளத்தின் நீரில் குளித்து அந்த நீரில் உணவு சமைத்து விரதம் இருப்பார்கள்.

டெல்லி
டெல்லியில் யமுனை நதிக்கரையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, யமுனை நதிக்கரையை தவிர மற்ற பகுதிகளில் கொண்டாட அரசு அனுமதி வழங்கியது. திருவிழா சுமார் 4 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.. அப்படித்தான் கடந்த திங்கட்கிழமை, சாத் பூஜை தொடங்கியது. இதன்காரணமாக, யமுனை நதியில் ரசாயன நுரை பெருக்கெடுத்து வந்துவிட்டது..

பஞ்சு போன்ற நுரை
நீர்நிலை முழுவதுமே நுரை பொங்கி பஞ்சுபோல தென்பட ஆரம்பித்தது.. சிலர் இதை பார்த்து பயந்துவிட்டார்கள்.. மேலும் சில பக்தர்களோ, இந்த ரசாயன நுரை பற்றி கவலைப்படாமல் அந்த யமுனை ஆற்றிலேயே குளித்து வழிபட துவங்கினர். நுரை பொங்குவதை பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் குளித்தனர்.. காளிந்தி கஞ்ச் அருகே யமுனை ஆற்றில் நீராடிய பார்வையாளர்கள் மகிழ்ந்தனர்..

டெல்லிவாசிகள்
யமுனை ஆற்றில் பொதுமக்கள் நின்று சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.. பார்ப்பதற்கு அச்சு அசல் அண்டார்கா போலவே உள்ளது நமது டெல்லி.. இதனிடையே நதியில் பெருக்கெடுத்துள்ள ரசாயன நுரையை அகற்றக்கோரி டெல்லி அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்... எனவே, ரசாயன நுரையை கரையில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் டெல்லி நீர்வாரியம் ஈடுபட்டுள்ளது... அதற்காக பல்வேறு யுக்திகளை கையில் எடுத்துள்ளது..

படகுகள்
அதன்படி, எங்கு பார்த்தாலும் நுரை பொங்கி வழியும்நிலையில், அவைகளை தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் செயலில் இறங்கி உள்ளனர்.. மேலும், படகுகளை வேகமாக இயக்கி, கரையில் படிந்துள்ள ரசாயன நுரையை நடு ஆற்றிற்கு தள்ளும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.. நுரையை அகற்றும் பணியில் 15 மோட்டார் படகுகளை டெல்லி அரசு களமிறக்கியிருக்கிறது.. அதேபோலல நுரை கரைக்கு வராதவாறு மூங்கில் தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன..

மீம்ஸ்கள்
இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, டெல்லி நீர்வாரியத்தின் அரசு ஊழியர் அசோக்குமார் என்பவர்தான்.. கடலளவு பரந்து விரிந்த நுரைகளை, கையில் ஒரு ஓஸ் பைப்பை வைத்து கொண்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்து போக்குகிறார்.. அதுவும் கரையோரத்தில் நின்றுகொண்டு, எங்கோ இருக்கும் நுரைக்கு குறி வைக்கிறார்.. நச்சு நுரையை வெளியேற்றவே இப்படி தண்ணீரை தெளிக்கிறோம் என்று ஏஎன்ஐ-க்கு பேட்டி தந்துள்ளார் அவர்.. இந்த அசோக்குமாரை தான் நம்ம ஊர் தெர்மாக்கோல் செல்லூர் ராஜு என்று குறிப்பிட்டு சோஷியல் மீடியாவில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

சுதந்திரம்
அதுமட்டுமல்ல, இதையொட்டி நிறைய மீம்ஸ்களையும் இணையவாசிகள் ஷேர் செய்து வருகிறார்கள்.. ஒருவர் வானில் பிரகாசித்து காணப்படும் சூரியனை நோக்கி ஒரு பொம்மை துப்பாக்கி சுடுவதை போல போஸ் தருகிறார்.. அப்படி சுட்டால் சூரியன் காணாமல் போய்விடுமாம்.. அதேபோல, இன்னொருத்தரோ, சுதந்திரம் தந்துவிட்டு ஓடிப்போன பிரிட்டிஷாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. தயவுசெய்து மறுபடியும் இந்தியாவை நீங்களே ஆள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. இப்படி ஏகப்பட்ட மீம்ஸ்களை நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

கழிவுகள்
மற்றொருபுறம், சமூக ஆர்வலர்கள் இந்த ரசாயன கழிவுகள் குறித்த எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.. ரசாயன கழிவுகள் கலந்த தண்ணீரில் குளிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றும், அசுத்தமான நீரில் ஆபத்தை உணராமல் பெண்களும் குழந்தைகளும் குளிக்கிறார்கள்... சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை யமுனை ஆற்றில் விடுவதே இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று கொந்தளிக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, டெல்லி வாசிகள் யமுனை நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications