ஜேஎன்யூவை தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலை.யில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்- பதற்றம்!
பிரதமர் மோடி தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திரையிடுவது என்பது டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களின் திட்டம்.
டெல்லி: ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளை மையமாக வைத்து India: The Modi Question என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் 2 தொகுதி ஆவணப் படங்களை உருவாக்கி உள்ளது. இந்த ஆவணப் படங்கள், பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கிறது என்பது சர்ச்சை. இதனால் பிபிசியின் ஆவணப் படங்களை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மோடி ஆவணப் படத்தை பல இடங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள் திரையிட்டு வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் கடந்த வாரம் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஆனால் பல்கலைக் கழக நிர்வாகம் இதற்கு அனுமதி தர மறுத்தது. இதனை மீறி தெலுங்கானா பல்கலைக் கழகத்தில் ஆவணப்படம் ஒளிபரப்பானது.
இதேபோல் டெல்லி ஜே.என்.யூ.விலும் மோடி குறித்த இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக இடதுசாரி, வலதுசாரி மாணவர் குழுக்களிடையே கடும் மோதல்கள் வெடித்தன. ஜே.என்.யூ. பல்கலைக் கழக வளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி ஆவணப்படங்களை மாணவர்கள் செல்போன் மூலம் ஒளிபரப்பினர்.
டெல்லி ஜேஎன்யூவைத் தொடர்ந்து ஜாமியா பல்கலைக் கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு மோடி ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனால் டெல்லி ஜாமியா பல்கலைக் கழக பகுதியிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications