மதுபான கொள்கை வழக்கு.. காந்தி நினைவிடத்தில் மரியாதை..சிபிஐ முன் ஆஜர் ஆனார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய மதுபான கொள்கை விவகாரம் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. கடந்த 2021-22 ஆம் ஆண்டு கெஜ்ரிவால் அரசால் வெளியிடப்பட்ட புதிய மதுபான கொள்கையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும் இதனால், சில தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, உரிமக்கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல், குறைத்தல் உள்ளிட்டவற்றில் ஊழல் நடந்ததாகவும் இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
இதன்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகிறது. இதே வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. மதுபான கொள்கையை உருவாக்கிய போது அந்த துறையை தன் வசம் வைத்திருந்த மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ முறைகேடு புகார்கள் விசாரணை நடத்தியது.

தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராகவும் டெல்லி துணை முதல்வராகவும் இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதன்படி இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகும் முன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆகியிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications