விரைவில் கைது? அமலாக்கத்துறையால் இறுகும் பிடி! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக சம்மன்
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்நிலையில் தான் 6வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனேவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான பிடி இறுக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து அந்த புதிய மதுபான கொள்கை வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும் அந்த புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரிக்க இறங்கியது. அமலாக்கத்துறை, சிபிஐ சார்பில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதோடு டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பியும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தான் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு கெஜ்ரிவால் பதிலளித்தார். அதன்பிறகு அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார். இதுவரை 5 முறை அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவதாக கூறி அவர் விசாரணையை புறக்கணித்து வருகிறார். இதற்கிடையே தான் அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாத விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கெஜ்ரிவால் பிப்ரவரி 17 ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது.
இத்தகைய சூழலில் தான் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அதிரடியாக 6வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருபக்கம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 17 ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அமலாக்கத்துறை தனியே விசாரணைக்கு வரும்படி அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
நில சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் இப்படித்தான் அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்து தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். அதன்பிறகு சமீபத்தில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்தது. அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை புறக்கணித்து வரும் நிலையில் விரைவில் அவரும் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications