Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏன் இப்படி பண்றீங்க".. கெஞ்சிய மருமகள்.. விடாத "பூமர்" மாமா.. நடுரோட்டில் செங்கல்லை தூக்கி என்னா அடி

பெண்கள் வேலைக்கு சென்றால் குடும்ப கவுரவம் போய்விடும் என்றும், நமது குடும்பத்தை உறவினர்கள் யாரும் மதிக்க மாட்டார்கள் எனவும் கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்திருக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது. இந்தியாவில் குடும்பங்களில் பெண்ணடிமைத்தனம் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

வேலைக்கு சென்ற மருமகளால் தனது குடும்ப கவுரவமே போய்விட்டதாக கூறி மாமனார் செய்த செயலால் தற்போது அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் வேலைக்கு சென்றால் குடும்ப கவுரவம் குறைந்துவிடும் என நம்பும் சில "பூமர்" பேர்வழிகள், இந்த 21-ம் நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்பதையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

வண்டவாளம் தண்டவாளம் ஏறிவடும்..

வண்டவாளம் தண்டவாளம் ஏறிவடும்..

பெண்ணடிமைத்தனம் இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டதாக நமது அரசாங்கம் பிரகடனம் செய்கிறது. ஆனால் அது உண்மையா.. நிச்சயம் இல்லை. பெண்கள் இன்று பல துறைகளில் சாதிக்கிறார்களே.. பைலட்டாக கூட இருக்கிறார்களே.. என நீங்கள் கேட்கலாம். உண்மைதான். யாரும் மறுக்கவில்லை. ஆனால், அது எத்தனை சதவீதம் என்பதுதான் கேள்வி. மிக மிக சொற்பமான எண்ணிக்கையிலான பெண்கள்தான் சமூக சங்கிலியை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். இன்னும் இந்தியாவில் எத்தனை குடும்பங்களில் (படித்தவர்கள் கூட), பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கிறார்கள் என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால், நமது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.

டெல்லி சம்பவம்

டெல்லி சம்பவம்


இன்னும் எத்தனை குடும்பங்களில், பெண்கள் சமையல் அறையுடன் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவற்றையெல்லாம் மீறி ஒரு பெண் வெளியே சென்றால் அவளுக்கு எதிராக நடத்தப்படும் குடும்ப வன்முறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.. அப்படியொரு சம்பவம்தான் டெல்லியில் நடந்திருக்கிறது. டெல்லியின் பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் காஜல் (27). இவருக்கு ராகுல் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது.

"யாரும் மதிக்க மாட்டார்கள்"

தனியார் நிறுவனத்தில் ராகுல் வேலை பார்த்து வருகிறார். குறைவான சம்பளமே ராகுல் பெறுவதால் குடும்பத்தை நடத்துவதில் கஷ்டம் ஏற்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு குழந்தையை பள்ளிக்கு சேர்க்க இந்த வருமானம் போதாது என காஜல் உணர்ந்தார். இதனால், பிஎஸ்சி இயற்பியல் படித்திருக்கும் காஜல் வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். ஆனால், அவரது கணவரும், கணவர் குடும்பத்தினரும் இதற்கு சம்மதிக்கவில்லை. பெண்கள் வேலைக்கு சென்றால் குடும்ப கவுரவம் போய்விடும் என்றும், நமது குடும்பத்தை உறவினர்கள் யாரும் மதிக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடைசி எச்சரிக்கை

கடைசி எச்சரிக்கை

ஆனால், தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த காஜல், கணவர் குடும்பத்தினர் பேச்சை சட்டை செய்யவில்லை. தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக ஒரு நல்ல நிறுவனத்தில் காஜலுக்கு வேலையும் கிடைத்தது. இதையடுத்து, முதல் நாள் வேலைக்கு செல்வதற்காக காஜல் இன்று தயாரானார். அப்போது வீட்டில் இருந்த கணவரும், தந்தையும் வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

செங்கல்லால் அடித்த மாமனார்..

செங்கல்லால் அடித்த மாமனார்..

ஆனால், காஜல் புறப்பட்டு வேலைக்கு சென்றார். அப்போது பாதி வழியில் அவரை மறித்த மாமனார் ரஞ்சன் சிங், "சொல்ல சொல்ல கேட்காமல் வேலைக்கு செல்கிறாயா.. ஒழுங்காக வீட்டுக்கு நடையை கட்டு" எனக் கூறியிருக்கிறார். ஆனால், காஜல் அவர் பேச்சை கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் கீழே இருந்த செங்கல்லை எடுத்து மருமகளின் தலையில் பலமாக தாக்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத காஜல் நிலைக்குலைந்தார். ஆனால், விடாத மாமனார் ரஞ்சன் சிங், திரும்ப திரும்ப காஜல் தலையில் செங்கல்லால் அடித்தார். இதில் அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து, அங்கிருந்தவர் காஜலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காஜல் அளித்த புகாரின் பேரில் அவரது மாமனார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+