நிம்மதியை தேடி.. வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்.. மனைவி புகாரால் தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்
Recommended Video
டெல்லி: நிம்மதி வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு கணவன் ஓடிய நிலையில் அவரை கண்டுபிடித்துக்கொடுக்க வேண்டும் என மனைவி போலீசில் புகார் அளித்தார். இதைடுத்து அவரை கண்டுபிடித்து மனைவியிடமே டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்.
டெல்லி பிதம்புரா பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் குப்தா வயது 52. இவர் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் திடீரென வீட்டை வீட்டு வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. கணவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி. தன் கணவன் காணமால் போனதாக கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி மயூரா போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார்.

புகாரை பெற்றுக்கொண்டு துரிதமாக செயல்பட்டு தீவிரமாக கவுதமை தேடிய போலீசார், அப்போது அவர் வீட்டின் பகுதியில் இருந்து அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செயதனர்.
கவுதம் குப்தா கோகட் என்கிளேவ் மெட்ரோ ரயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் மூலம் இங்கு தான் செல்கிறார் என்பதை போலீசார் உறுதிபடுத்தினர். காலை 9:10 மணியளவில் காஜியாபாத் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிய குப்தா பின்னர், காஷ்மீர் கேட் நிலையத்தில் இறங்கி காலை 9:47 மணிக்கு ஐ.எஸ்.பி.டி சென்று உள்ளார்.
இப்படி ஒவ்வொரு சிசிடிவி கேமராவாக ஆய்வு செய்த போலீசார் எங்கு சென்ற இடம் எல்லாம் தேடினர். கடைசியாக உத்தரகாண்ட் பேருந்து நிலையம் அருகே குப்தா இருப்பது சிசிடிவி மூலம் கண்டுபிடித்தனர்.
இதன் பின்னர் கவுதம் குப்தாவின் குடும்பத்தினருடன் போலீசார் ஹரித்வாருக்கு சென்றார்கள் அங்கு அவர்கள் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து, கவுதம் குப்தா ஒரு ஓட்டலில் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.. இதையடுத்து அவரை மீட்டு டெல்லிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு வைத்து கவுதம் குப்தா விடம் போலீசார் நடத்திய விசாரணையில் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க சென்றதாகவும் அதற்காகத்தான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்றதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications