Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச படத்தை போல்.. மனைவிக்கு நூதன சித்ரவதை கொடுத்த கணவர்! இப்படியா செய்வாங்க? ஷாக்கில் டெல்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஆபாசபடத்துக்கு அடிமையான கணவர், தனது மனைவிக்கு வித்தியாசமான முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் முடிந்த பிறகு சில பெண்களிடம் அவர்களிடம் கணவர்கள் கூடுதல் வரதட்சனை கேட்பது அவ்வப்போது நடந்து வருகிறது. மேலும் சிலர் பெண்களுக்கு வித்தியாசமான முறையில் தொல்லை கொடுப்பதும், சித்ரவதை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தான் தற்போது டெல்லியில் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்துள்ளார். அப்படி என்ன நடந்தது? அவர் புகாரில் என்ன கூறியுள்ளார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

Delhi man forcing his wife to watch porn and dress up like pornstars

டெல்லியில் வசித்து வரும் இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த பெண்ணுக்கு தற்போது 30 வயது ஆகிறது. திருமணமான புதிதில் இந்த தம்பதி மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில் தான் அதன்பிறகு இளம்பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இளம்பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிகளவில் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதற் குஅவர் மறுத்த நிலையில் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மனதளவிலும் தொல்லை கொடுத்துள்ளனர். குறிப்பாக அந்த இளம்பெண்ணுக்கு அவரது கணவர் வித்தியாசமான முறையில் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இளம்பெண்ணை ஆபாசபடம் பார்க்க வலியுறுத்தியுள்ளார். அதோடு ஆபாசபடத்தில் வரும் பெண்கள் போல் உடையணிந்து கொள்ளும்படி கூறி சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களாக இதனை இளம்பெண் பொறுத்து கொண்ட நிலையில் நிலைமை எல்லை மீறி சென்றது. இதனால் மனவருத்தமடைந்த அந்த பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

அதில் தனது கணவர் ஆபாசபட அடிமை என குற்றம்சாட்டி அடுக்கடுக்கான விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛இளம்பெண்ணை ஆபாசபடம் பார்க்கும்படியும், அதில் வரும் பெண்கள் போல் ஆடை அணியும்படி கணவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கணவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ரோகித் மீனா கூறுகையில், ‛‛சம்பவம் குறித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 498 ஏ ( பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துதல்), 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) மற்றும் 34 (பொது நோக்கத்துடன் குற்றம் செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+