லிவிங் டுகெதர் பயங்கரம்! காதலியை 35 துண்டுகளாக வெட்டி.. நாய்களுக்கு வீசி வந்த இளைஞர் - அலறும் டெல்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'லிவிங் டுகெதர்' (Living Together) உறவில் ஏற்பட்ட தகராறால் தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசிய சைக்கோ இளைஞரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இன்றைய தலைமுறை இளைஞர்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறை தற்போது அவர்களுக்கே 'பூமராங்' போல எமனாக திரும்பி வருகிறது. மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாறுகிறோம் என பெருமையாக நினைத்துக் கொண்டு, தங்களை தாங்களே புதைக்குழியில் தள்ளியதை இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகின்றனர். இந்தியர்களை கண்டு மேற்கத்திய நாட்டு மக்கள் வியக்கும் விஷயங்களில் ஒன்று நமது திருமண முறை. எப்படி ஒரே தம்பதியர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியாமல் வாழ்கின்றனர் என்பது இன்று வரைக்கும் அவர்களுக்கு தீராத ஆச்சரியம் தரும் விஷயமாக உள்ளது. இந்த திருமண உறவால் ஏற்படும் வலுவான குடும்பப் பிணைப்புகள்தான் இந்தியாவில் பலமாக இருக்கிறது.

ஆனால், இந்தியாவில் ஐடி தொழில் நிறுவனங்கள் நுழைந்த பிறகு, அதில் வேலைக்கு சேரும் நமது இளைஞர்கள் பெரும்பாலானோர் தன்னையும் ஒரு அமெரிக்கராகவே கருதிக் கொள்கின்றனர். எனவே அமெரிக்க கலாச்சாரத்தில் இருக்கும் லிவிங் டுகெதர் எனப்படும் திருமணமாகாமலேயே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் முறையை இந்திய இளைஞர்கள் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர். ஆனால், இது வெகுகாலம் நீடிக்காததுடன் மட்டுமல்லாமல் சில சமயங்களில் விபரீதங்களிலும் முடிந்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம்தான் டெல்லியில் நடந்துள்ளது.

வினையாக மாறிய லிவிங் உறவு..

வினையாக மாறிய லிவிங் உறவு..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஷாரதா (26). அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த ஷாரதாவுக்கும், அதே நிறுவனத்தில் வேலை செய்து அஃப்டாப் அமீன் (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக இருந்த இவர்களின் பழக்கம், ஒருகட்டத்தில் 'டேட்டிங்' செல்வது வரை சென்றது. இதன் தொடர்ச்சியாக, தனியாக ஒரு வீடு எடுத்து அவர்கள் 'லிவிங்' உறவில் இருக்க தொடங்கினர்.

பெற்றோர் எதிர்ப்பு

பெற்றோர் எதிர்ப்பு

இந்த விஷயம் ஷாரதாவின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஷாரதாவின் போக்கை கண்டித்த அவரது பெற்றோர், அமீனுடனான உறவை துண்டித்துவிட்டு வீட்டுக்கு வருமாறு கூறினர். ஆனால், பெற்றோர் பேச்சை கேட்காத ஷாரதா, அமீனை விட்டு பிரியாமல் இருந்துள்ளார். எனினும், ஷாரதாவின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு சென்று அமீனுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் டெல்லிக்கு சென்று அங்கு லிவிங் உறவில் இருந்துள்ளனர்.

35 துண்டுகளாக வெட்டி..

35 துண்டுகளாக வெட்டி..

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அமீனிடம் ஷாரதா வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அமீன் இதை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஷாரதாவின் தொந்தரவால் ஆத்திரமடைந்த அமீன், அவரை தீர்த்துக்கட்டுவது என முடிவு செய்தார். அதன்படி, சில வாரங்களுக்கு முன்பு ஷாரதாவை அமீன் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக தினமும் இரவு 2 மணியளவில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாய்களுக்கு வீசி வந்தார்.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

இதனிடையே, ஷாரதாவின் செல்போன் பல நாட்களாக அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸுக்கு அவர் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் அமீனை பிடித்து விசாரித்ததில், அவர் ஷாரதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அமீனை போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+