நண்பனுடன் சேர்ந்து துரோகம்.. "ப்ளே கேர்ள்" மனைவி.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய கணவன்! டெல்லியில் ஷாக்
டெல்லி: தனது நண்பனுடன் முறையற்ற உறவில் மனைவி இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், அவர்கள் இருவரையும் வெட்டிக் கொன்ற பயங்கர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
இளைஞர் பல முறை மனைவியைும், நண்பனையும் எச்சரித்தும் அவர்கள் அதை பொருட்படுத்தாததால், இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
முதலில் தனக்கும், இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிவித்த அந்த இளைஞர், பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

காதல் திருமணம்
டெல்லியைச் சேர்ந்தவர் சன்னி (32). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா (30) என்பவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் உள்ள நொய்டாவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்கள், அங்குள்ள மருத்துவமனையில் கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர்.

நண்பனின் அறிமுகம்
இவ்வாறு நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் கடந்த 3 மாதங்களாக புயல் வீசத் தொடங்கியது. மூன்று மாதங்களுக்கு முன்பு சன்னி தனது நெருங்கிய பால்ய நண்பனான சாகர் என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போதுதான், சாகருக்கும், சன்னியின் மனைவி சரண்யாவுக்கும் இடையே அறிமுகமாகியுள்ளது. பின்னர், அடிக்கடி சன்னியின் வீட்டிற்கு சாகர் வர தொடங்கியுள்ளார்.

கணவன் கொடுத்த 'வார்னிங்'
இதனால் சாகருக்கும், சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. இருவரும் தொலைபேசியில் பேசிக்கொள்வதும், தனிமையில் சந்தித்துக் கொள்வதுமாக நாட்களை நகர்த்தி வந்தனர். ஒருகட்டத்தில், இவர்களுக்கு இடையேயான உறவு கணவன் சன்னிக்கு தெரியவந்தது. இதையடுத்து, இந்த முறையற்ற உறவை விட்டுவிடுமாறு தனது நண்பனையும், மனைவியையும் ஒரு மாதக்காலமாக எச்சரித்து வந்துள்ளார் சன்னி. ஆனால், அவர்கள் இருவரும் சன்னியின் பேச்சை பொருட்படுத்தவில்லை.

கொலை.. கைது..
இதனிடையே, சன்னி கடந்த 30-ம் தேதி வேலைக்கு சென்ற நிலையில், சாகரும் சரண்யாவும் அவர்கள் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்கு வந்த சன்னி, வீட்டில் இருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும், பின்னர் காரை எடுத்து குத்துயிரும், கொலை உயிருமாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். எனினும், சிகிச்சை பலனில்லாமல் அவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த சரண்யாவின் கணவர் சன்னியை பிடித்து விசாரித்தனர். அப்போது, தான் கொலை செய்ததை சன்னி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீஸார் சன்னியை கைது செய்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications