"பிகினி உடை.." மெட்ரோவில் பட்டப்பகலில் இளம்பெண் செய்த காரியம்.. மிரண்டு பார்த்த மக்கள்! பரபர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் மெட்ரோவில் பெண் ஒருவர் பிகினி ஆடை அணிந்து பயணித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது.

இந்தியாவில் உடைகள் என்பது எப்போதுமே பேசுபொருளாகவே இருந்து வந்துள்ளது. பொது இடங்களில் ஒருவர் அணியும் உடை என்பது இங்கே எப்போதுமே விமர்சனமாகவே இருந்துள்ளது.

அதிலும் குறிப்பாகப் பெண்கள் அணியும் உடைகள் என்பதை வைத்து இங்கே பல காலமாக விவாதம் நடந்து வருகிறது. இதனிடையே டெல்லியில் மெட்ரோவில் நடந்த ஒரு சம்பவம் இப்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

உடை

உடை

உடை என்பது எப்போதும் ஒருவரது தனிப்பட்ட தேர்வு தான். சட்டத்தை மீறாத வரையில் ஒருவர் என்ன மாதிரியான உடையை அணிய வேண்டும் என்பதைச் சொல்ல மற்றவர்களுக்கு உரிமை இல்லை. ஆனால், இந்தியாவில் உடை என்பதைப் புள்ளியாக வைத்துத் தொடர்ந்து விவாதங்கள் நடந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும் என்பதில் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது.

 தனிப்பட்ட உரிமை

தனிப்பட்ட உரிமை

பாலியல் பலாத்கார சம்பவங்களில் கூட பெண் உடைகளைக் காரணமாகச் சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. ஆனாலும். இங்கே அப்படியொரு சூழல் தான் நிலவுகிறது. ஆடைகள் தேர்வு ஒருவரது தனிப்பட்ட உரிமை என்ற போதிலும், சில சமயம் ஒருவர் அணியும் ஆடைகள் இணையத்தில் பல விதமான கருத்துகளைக் கிளப்பிவிடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

 டெல்லி மெட்ரோ

டெல்லி மெட்ரோ

டெல்லி மெட்ரோவில் பெண் ஒருவர் மினி ஸ்கர்ட் மற்றும் பிகினி அணிந்து பயணித்துள்ளார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது இணையத்தில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. பலரும் அவரது உடை தேர்வு குறித்து கருத்து கூறி வருகின்றனர். இணையத்தில் பரவும் அந்த வீடியோவில், பெண் தனது மடியில் பேக் ஒன்றை வைத்து அமர்ந்து பயணிக்கிறார்.

 பிகினியில் இளம்பெண்

பிகினியில் இளம்பெண்

அப்போது அவரது உடை ஆபாசமாக எதுவும் தெரியவில்லை. ஆனால், அவரது ஸ்டாப் வரும் போது, அந்த பெண் இறங்குகிறார். அப்போது, அந்த பெண்ணின் ஆடைகள் தெரிகிறது. அந்த பெண் சிறிய குட்டை பாவாடை மற்றும் பிகினி அணிந்துள்ளார். அந்த பெண்ணை "டெல்லி மெட்ரோ கேர்ள்" என்று குறிப்பிடுகின்றனர். அந்த பெண் அணிந்திருக்கும் ஆடையை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

 எலி கடிச்சிடுச்சா

எலி கடிச்சிடுச்சா

நெட்டிசன்கள் பலரும் இதை அநாகரிகமான ஆடையாகவே பார்த்து விமர்சித்துள்ளனர். இந்த பெண்ணின் உடையை எலிகள் கடித்துத் தின்றுவிட்டதா என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இதனால் எலிகளை ஒழிக்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் சமீபத்தில் டெல்லி மெட்ரோ நடந்த சம்பவத்துடன் இதை ஒப்பிட்டுள்ளார்.

 பாலின பாகுபாடு

பாலின பாகுபாடு


சமீபத்தில் உள்ளாடையுடன் மெட்ரோவில் பயணித்த ஒருவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த சம்பவத்தைச் சுட்டிக் காட்டிய இளைஞர் ஒருவர், ஆண் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளீர்களே, இந்த பெண்ணும் உள்ளாடையுடன் தான் பயணித்துள்ளார். அவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரம் வெகு சிலர் ஆடை தேர்வு சுதந்திரத்தை விமர்சிக்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+