"'டெய்லி மசாஜ், சீக்ரெட் மீட்டிங்.." சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் அமைச்சர்! பரபர சிசிடிவி வீடியோ
டெல்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
தலைநகர் டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களில் ஒருவர் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்.
கடந்த 2017இல் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் சத்யேந்தர் ஜெயின் கடந்த மே மாதம் கைது செய்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சத்யேந்தர் ஜெயின்
இந்தச் சூழலில் சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயின் உள்ளே சொகுசு வாழ்க்கையை வாழ்வதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சியிகளையும் அமலாக்க துறை டெல்லி நீதிமன்றத்தில் சமர்பித்து உள்ளது. சிறையில் ஜெயின் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை அடிக்கடி சந்தித்து விசாரணையில் தலையிட்டு வருவதாகவும் அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.

திகார்
இது தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "திகார் சிறையில் ஜெயினுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது. சிறைக்குள்ளேயே அவருக்கு மசாஜ் வசதி எல்லாம் கூட கிடைக்கிறது. சிறைத்துறை அமைச்சராகவும் இருக்கும் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், விதிமுறைகளுக்கு புறம்பாக சிறைக் கண்காணிப்பாளர் சத்யேந்தர் ஜெயினை தினமும் சந்திக்கிறார்.

திசை திருப்பும் முயற்சி
சத்யேந்தர் ஜெயின் மனைவி பூனம் ஜெயின் சிறைக்குள்ளேயே சென்று அவரைச் சந்திக்க அடிக்கடி வருகிறார். இதுவும் சிறை விதிகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகளையும் அடிக்கடி சந்திக்கிறார். இவை அனைத்தும் விதிமுறைகளுக்கு புறம்பானது. விசாரணையில் தலையிட்டு, அதை திசை திருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டு உள்ளார்" என்று அதில் கூறப்பட்டு உள்ளார்.

திகார் சிறை விளக்கம்
இது தொடர்பாக திகார் சிறை நிர்வாகமும் விளக்கம் அளித்து உள்ளது. அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டதின் பெயரில் சிசிடிவி காட்சிகளை பகிர்ந்தாக கூறியுள்ள அமலாக்கத்துறை, "விதிமுறைகளை மீறி யாரும் சிறைக்குள் வந்து ஜெயினை சந்திக்கவில்லை. ஒவ்வொரு நாளும் காலையில் வருகை பதிவு செய்யப்படும். அப்போது கைதிகள் மற்ற கைதிகளுடன் பேச கூடாது என்று விதிமுறை இல்லை" என்று கூறப்பட்டு உள்ளது.

மறுப்பு
அவர் சிறையில் இதே குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுடன் பேசி வருவதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், அதற்கு திகார் சிறைத்துறை இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது. அதேநேரம் செல்களுக்கு சென்ற பின் யாருடனும் பேச அனுமதி இல்லை என்றும் சத்யேந்தர் ஜெயினிடம் எந்தவொரு மொபைல் போன்ற எலக்ட்ரானிக் கேஜெட் இல்லை என்றும் திகார் சிறை துறை தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications