பிரிட்ஜில் உடல்.. கோவா ட்ரிப்பை கேன்சல் செய்த நிக்கி.. கடைசியாக என்ன நடந்தது? தந்தை பரபரப்பு பேட்டி
டெல்லியில் கொல்லப்பட்ட நிக்கி யாதவ் என்ற ஷாகில் கெலாட் என்பவருடன் லிவிங் டு கெதரில் இருந்தது தனக்கு தெரியாது என நிக்கி யாதவின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்
டெல்லி: டெல்லியில் கொல்லப்பட்ட நிக்கி யாதவ் என்ற ஷாகில் கெலாட் என்பவருடன் லிவிங் டு கெதரில் இருந்தது தனக்கு தெரியாது என நிக்கி யாதவின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். டெல்லி போலீஸார் சொல்லித்தான் தன் மகள் கைதான சாஹில் கெலாட்டுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததும், கொல்லப்பட்டதும் தெரியவந்ததாக நிக்கி யாதவ்வின் தந்தை கூறியுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள நசாப் கார்க்கை சேர்ந்தவர் ஷாகில் கெலாட் வயது 26. இவர் 2018 ஆம் ஆண்டு உத்தம் நகர் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நிக்கி யாதவ் என்ற இளம் பெண்ணை முதல்முதலாக சந்தித்து இருக்கிறார். இருவரும் நட்பாகி பின்னர் காதலிக்க தொடங்கி உள்ளார். காதலித்ததுடன் இருவரும் லிவ்விங் டுகெதரில் இருந்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஷாகில் கெலாட், நிக்கி யாதவை திருமணம் செய்யாமல் அலைகழித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஷாகில் கெலாட் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதனால் தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

டேட்டா கேபிள்
2022 டிசம்பரில், கெலாட்டிற்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமணம் முறையே பிப்ரவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை எப்படியோ அறிந்த நிக்கிக்கும், கெலாட்டிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து நிக்கியை தனது காரில் வைத்திருந்த டேட்டா கேபிளைக் கொண்டு கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் நிக்கி யாதவ் இறந்துவிட்டார்.

சாஹில் கெலாட்
கொல்லப்பட்ட பின்னர் நிக்கி உடலை, டெல்லியை அடுத்த நஜஃப்கரில் உள்ள மித்ரான் கிராமத்தின் புறநகரில் செயல்படும் தங்களுக்கு சொந்தமான தாபாவிற்கு கொண்டு சென்றுள்ளார் கெலாட். அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் நிக்கி உடலை மறைத்து வைத்துள்ளார். பின்னர் சாஹல் தனது வீட்டிற்குச் சென்று வேறொரு பெண்ணுடன் திருமணத்தை நடத்தினார். 3 நாட்களுக்கு பின்னரே இந்த விவகாரம் போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றியதுடன், ஷாகில் கெலாட்டையும் கைது செய்தனர்.

அப்பா அழைப்பை
இந்நிலையில் நிக்கியின் தந்தை தன் மகள் ஷாகில் கெலாட் என்பவருடன் லிவிங் டு கெதரில் இருந்தது தனக்கு தெரியாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். போலீஸ் சொல்லித்தான் தனக்கு நடந்த சம்பவம் தெரியும் என்றார். இதுபற்றி ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த நிக்கியின் தந்தை, கொலை நடந்த ஒரு நாளுக்குப் பிறகு பிப்ரவரி 11 அன்று ஷாகிலை நான் அழைத்தேன். அவர் நிக்கி தனது தோழிகளுடன் முசோரி மற்றும் டேராடூன் சென்றிருப்பதாக கூறினார். என் மகள் போனை அவனிடம் விட்டுச் சென்றதாகவும் ஷாகில் கூறினார்.

என் மகள் இறந்தாள்
மேலும் நிக்கி பற்றி என்னிடம் தப்புத்தப்பாக பேசினார். என்னை தவறாக வழிநடத்தினார். நிக்கியுடன் வாழ விரும்புவதாகவும், திருமணம் ஆகிவிட்டதால் நிக்கியுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்றும் கூறினார். இதனிடையே போலீசார் என் மகள் கொல்லப்பட்டது பற்றி நேற்று (செவ்வாய்க்கிழமை) எனக்கு தெரிவித்தனர்.. காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஒரு உடலை அடையாளம் காண வேண்டும் என போலீசார் என்னை அழைத்தனர், அப்போதுதான் அது எனது மகளின் உடல் என்பதை நான் அறிந்தேன். ஷாகிலுக்கு மரண தண்டனை வேண்டும். அவரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணான நிக்கியின் தந்தை கூறினார்.

நிக்கி தந்தை
நிக்கியின் தந்தை மேலும் கூறுகையில், "என் மகள் நொய்டாவில் உள்ள கல்கோடியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆனர்ஸ் படித்து வந்தார்.கடந்த 15-20 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் எங்களுடன் தங்கினார் என் மகள் அண்மைக்காலமாக மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்டார்" என்றும் நிக்கியின் தந்தை கூறினார்.

போலீஸ் காவல்
இதனிடையே நிக்கியை கொன்றதாக ஷாகில் கெலாட்டை கைது செய்த போலீசார், நிக்கியை கொன்று தாபாவிற்கு கொண்டு செல்ல பயன்படுத்திய வெள்ளை நிற காரை மீட்டனர். மேலும் கெலாட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். கொல்லப்பட்ட நிக்கி பிப்ரவரி 10 அன்று கோவாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் சாஹில் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்த பிறகு அந்த திட்டத்தையே ரத்து செய்தார் என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட நிக்கியின் உடல் ஹரியானாவில் உள்ள அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications