கைது..வழக்குப்பதிவு..ஜந்தர் மந்தரில் அனுமதி மறுப்பு..மல்யுத்த வீரர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
டெல்லி: பாலியல் வழக்கில் பாஜக எம்பியை கைது செய்ய கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் கெடுபிடியால் மல்யுத்த வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றியுள்ளார். ஆனால் இவரால் 10க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார் வீரர் மற்றும் வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அவர் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஆதரவளிக்க முன்வந்தனர். ஆனால் இந்த போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்ற விரும்பவில்லை என்று வீரர்கள் மறுத்து, அரசியல் கட்சியினரின் ஆதரவை பெறவில்லை.
இப்படி இருக்கையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வீரர்களை அழைத்து பிரச்னை குறித்து பேசியது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைக்கப்படுவதாகவும், அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தற்போதுவரை பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படவில்லை.

எனவே மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த முறை போராட்டத்திற்கு அரசியல் கட்சியினரின் ஆதரவை அவர்கள் நாடினர். மட்டுமல்லாது விவசாயிகளும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து போராட்டம் வலுவடைந்தது. போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 35வது நாளை எட்டியது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்றமும் நேற்று திறக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற வளாகத்தில் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சுமார் 200 மல்யுத்த வீரர்கள், இது தவிர அரசியல் கட்சிகளின் இளைஞர் மாணவர் அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் என பலரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்துவதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. நேற்று வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று இன்னும் அவர்கள் போராட்டத்தை தொடரவில்லை. மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரினால் ஜந்தர் மந்தர் பகுதியில் இடம் கொடுக்கப்படாது என்றும், அதற்கு பதிலாக மாற்று இடம் ஒதுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது.
இது மல்யுத்த வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த போராட்டம் தொடங்கிய போது டெல்லி போலீஸில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீரர்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் டெல்லி போலீஸ் இழுத்தடித்து வந்தது. எனவே வீரர்கள் நீதிமன்றத்தை நாடினர். பின்னர்தான் 7 நாட்கள் கழித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இப்படி இருக்கையில், தற்போது போராட்டம் நடத்திய வீரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்திருந்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஜந்தர் மந்தர் பகுதியில் இடம் ஒதுக்க போலீஸ் மறுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications