குடியரசு தின சம்பவம்... இதுவரை 84 பேர் அரெஸ்ட்... 38 எப்.ஐ.ஆர்... அதிரடி காட்டும் டெல்லி போலீஸ்!
டெல்லி: டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 84 பேரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் கூடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு டெல்லி போலீசார் கைது செய்து வருகின்றனர்.
டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது.

சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு டெல்லி போலீசார் கைது செய்து வருகின்றனர்.
மேலும், பலர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 84 பேரை கைது செய்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications