இஸ்ரேல் தூதரகம் அருகே வெடித்த குண்டு! 2 பேரை அடையாளம் கண்ட டெல்லி போலீஸ்.. தீவிர தேடுதல் வேட்டை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலஸ்தீனம் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நேற்று டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த விஷயத்தில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக டெல்லி பொலீஸ் கூறியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உலக நாடுகள் எவ்வளவோ முயன்றாலும் தற்போது வரை இங்கு நிரந்தர அமைதி சாத்தியமாகவில்லை. குறிப்பாக ஐநா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் சொன்ன 'சுதந்திர பாலஸ்தீனம்' எனும் அறிவுரையை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் இருக்கின்றன. இதுதான் தற்போதைய மோதலுக்கும் காரணமாக இருக்கிறது.

Delhi Police intensively investigate the blast incident near the Israeli embassy

தொடர் மோதல் போக்கின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், திடீர் ராக்கெட் தாக்குதலை தொடுத்தது. மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சிலரை பணைய கைதிகளாக பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக ஏறத்தாழ 50 நாட்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் 7,000 குழந்தைகள் உட்பட 20,400 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த போர் இரு நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லாமல், பிராந்தியம் முழுவதும் பரவும் சூழல் எழுந்திருக்கிறது. அதாவது அரசு கடற் பகுதிகளில் இஸ்ரேல் நோக்கி செல்லும் அல்லது இஸ்ரேலிலிருந்து வரும் கப்பல்கள் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹவுதி தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் இந்தியாவுக்கு வந்துக்கொண்டிருந்த கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல நேற்று டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்திருக்கிறது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வெடித்த இடத்தில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து காவல்துறை கூறுகையில், "இஸ்ரேல் தூதரகம் அருகே வெடித்தது குண்டு அல்ல. அது சக்தி வாய்ந்த பட்டாசு. கவனத்தை ஈர்க்கவே மர்ம நபர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிக்கப்பட்ட இடத்தில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தங்களை இஸ்ரேலியர் என பொதுவெளியில் அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் இஸ்ரேல் நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+