லோக் சபாவில்...திமுக எம்பி கதிர் ஆனந்த் புகார்...டெல்லி போலீசார் விசாரணை துவக்கம்!!
டெல்லி: உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் நேற்று லோக் சபாவில் புகார் அளித்து இருந்த நிலையில் இதுகுறித்து இன்று டெல்லியில் இருக்கும் சாணக்கியாபுரி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் திமுக எம்பி கதிர் ஆனந்த். வேலூர் லோக் சபா எம்பியாக முதன் முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் சென்றுள்ளார்.

வங்கி மசோதா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. அவை துவங்குவதற்கு முன்பே முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதன்படி, தினமும் கூச்சல், குழப்பத்துடன் முக்கிய மசோதாக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நேற்றும் வங்கி திருத்த சட்ட மசோதா மற்றும், தொழிலாளர் திருத்த சட்ட மசோதாக்கள் நிறைவேறி இருக்கின்றன.

தமிழ்நாடு
இந்த நிலையில் நேற்று லோக்சபா சபா துவங்கியபோது திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அளித்த புகாரில், ''நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் எனக்கு மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தங்களை என்னிடம் உளவுத்துறையினர் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

உறுப்பினர்
லோக் சபாவில் நான் கேட்க இருக்கும் கேள்விகள் என்னென்ன என்று கேட்டு அறிந்து கொள்ள முயன்றனர். ஒரு லோக் சபா உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

விசாரணை
இதுகுறித்து டெல்லி சாணக்கியபுரி போலீசில் கதிர் ஆனந்த் புகார் கொடுத்து இருந்த நிலையில், போலீசார் விசாரணையை துவக்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் தங்கி இருந்த அறைக்கு வெளியே பொருத்தப்பட்டு இருக்கும் கேமரா மற்றும், வருகை பதிவேட்டில் யார் வந்து சென்றனர் என்று தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications