மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு- விவசாயிகள் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் கறுப்பு தினம் கடைபிடிப்பு
டெல்லி: நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் அழைப்பை ஏற்று இன்றைய நாள் நாடு முழுவதும் கறுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிர், கடும் வெயில், கொரோனா பாதிப்பு என அத்தனைக்கும் மத்தியில் 6 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை.

அதேநேரத்தில் 3 விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பதவியேற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது.
விவசாயிகள் விரோத சட்டங்களைக் கொண்டு வந்த பிரதமர் மோடி பதவியேற்ற இன்றைய நாளை (மே 26) நாடு முழுவதும் கறுப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்புக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இன்று பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் வீடுகள், வாகனங்களில் கறுப்பு கொடி ஏற்றி கறுப்பு தினத்தை கடைபிடித்தனர். தமிழகத்திலும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications