டெல்லி கலவரம்.. மோசமான & அலட்சியமான போலீஸ் நடவடிக்கை.. ரூ 25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: கடந்த ஆண்டு ஏற்பட டெல்லி கலவரம் தொடர்பான ஒரு வழக்கை டெல்லி போலீசார் அலட்சியமாகவும் கேலிக்குரிய வகையிலும் விசாரித்துள்ளதாகச் சாடியுள்ள டெல்லி நீதிமன்றம், ரூ .25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் இறுதி முதலிலேயே தலைநகர் டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிப்ரவரி மாதம் டெல்லியில் திடீரென கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கலவரத்தின் போது முகமது நசீர் என்பவரை நோக்கி நரேஷ் தியாகி நசீர் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் முகமது நசீரின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டு, பார்வை இழந்துள்ளார். இது தொடர்பாக அவர் பல முறை புகார் அளித்தும் டெல்லி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
டெல்லி நீதிமன்றத்தில் இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் தனியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தில் போதிய ஆதாரம் இல்லை என்றும் சம்பவம் நடைபெற்றபோது குற்றஞ்சாட்டப்பட்டவர் டெல்லியிலேயே இல்லை எனத் தெரிவித்த போலீசார், இது குறித்து மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீசாரை கடுமையாகச் சாடிய கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் , இந்த சம்பவத்தில் போலீசாரின் விசாரணை மோசமானதாகவும் கேலிக்குரிய வகையிலும் இருந்ததாகச் சாடினர்,
டெல்லி போலீசாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, முகமது நசீர் அளித்த புகாரில் தனியாக ஒரு எஃப்.ஐ.ஆரை பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேவையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய இந்த உத்தரவின் நகலை டெல்லி போலீஸ் கமிஷனருக்கு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications