டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் மடமடவென உயரும் கொரோனா கேஸ்கள்.. காரணம் என்ன?.. திக்குமுக்காடும் தலைநகரம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் கேஸ்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 131 பேர் பலியாகிவிட்டனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 89 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகம், டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு முன்னணி இடத்தில் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக டெல்லியில் 7,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 131 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 7,943 ஆக உள்ளது.

கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது

பாதிப்பு

பாதிப்பு

செவ்வாய்க்கிழமை அன்று 62 ஆயிரம் பேருக்கு புதிதாக நடத்தப்பட்ட சோதனையில் 12.03 சதவீதம் பேர் பண்டிகை காலம் மற்றும் மாசு அதிகரித்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை கூறுகிறது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

நவம்பர் மாதம் 11-ஆம் தேதி ஒரே நாளில் கொரோனாவால் 8,593 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 42,458 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் கொரோனாவால் டெல்லியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,03,084 ஆகும்.

ஹரியானா

ஹரியானா

டெல்லியில் கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருமண விழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு ஹரியானா அரசு தன் மாநில மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மாஸ்குகள்

மாஸ்குகள்

இந்தியாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் டெல்லியில் நிலைமையோ வித்தியாசமாக இருக்கிறது. 2 கோடி மக்கள் காற்று மாசால் அவதிப்படுகிறார்கள். தீபாவளிக்கு கடந்த வாரம் ஷாப்பிங் சென்றதால் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தது. மக்கள் மாஸ்க் போட வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

English summary
Delhi's covid cases crosses 5 lakhs and a single day death is 131.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X