வருகிறது செயற்கை மழை.. டெல்லியில் "மேக விதைப்பை" கையில் எடுத்த ஆய்வாளர்கள்.. இது பலன் தருமா?
டெல்லி: கடந்த பல ஆண்டுகளாகவே டெல்லியில் காற்று மாசு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அங்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் செயற்கை மழை மூலம் காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுகள் விரைவில் தொடங்குகிறது.
டெல்லி கடந்த பல ஆண்டுகளாகவே காற்று மாசு காரணமாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. சில ஆண்டுகளாக அதன் வீரியம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அளவுக்குக் கூட நிலைமை மோசமாக இருக்கிறது. இதனால் காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

செயற்கை மழை
அதன் ஒரு பகுதியாக இப்போது செயற்கை மழை மூலம் காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜூலை 4 முதல் 11 வரை மேக விதைப்பு சோதனையைத் தொடங்க உள்ளது. டெல்லியில் இதுபோல மேக விதைப்பு மூலம் செயற்கை மழை கொண்டு வர முயற்சிகள் நடப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆய்வாளர்கள் திட்டம்
ரூ.3.21 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தைச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா அறிவித்தார். இதற்காகவே செஸ்னா விமானம் ஒன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் மூலம் சில்வர் அயோடைடு நானோ துகள்கள், அயோடைஸ்டு உப்பு மற்றும் பாறை உப்புக் கலவையை வடமேற்கு டெல்லி மற்றும் டெல்லி புறநகர் பகுதிகளில் ஈரப்பதம் நிறைந்த மேகங்களில் தெளிக்கப்படும். இதனால் மழை பெய்யும் என்றும் இதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஐஐடி கான்பூர் மற்றும் ஐஎம்டி புனேவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைக்கிறார்கள். இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் இது மிகப் பெரிய சாதனையாக இருக்கும். ஒவ்வொரு 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேக விதைப்பு சோதனை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேக விதைப்பு என்றால் என்ன?
மேக விதைப்பு என்பது வெள்ளி அயோடைடு அல்லது உப்பு போன்ற சிறப்புப் பொருட்களை மேகங்களில் தெளிப்பது மழை உருவாக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். விமானங்கள், ராக்கெட்டுகள் அல்லது தரையில் உள்ள இயந்திரங்கள் மூலம் இதுபோல மேக விதைப்பை செய்ய முடியும்.
வறட்சியைச் சமாளிக்க, பனிப்பொழிவை அதிகரிக்க, ஆலங்கட்டி மழையைக் குறைக்க, மூடுபனியை அகற்ற அல்லது காற்றின் தரத்தை மேம்படுத்த இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சீனா, அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் போன்ற பல நாடுகளில் ஏற்கனவே பல ஆண்டுகளாக மேக விதைப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
அட அப்படி என்றால் வறண்ட பகுதிகளிலும் கூட மழை பெய்ய வைக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். இந்தத் தொழில்நுட்பம் அப்படிச் செயல்படாது. ஏற்கனவே மழை மேகங்கள் இருக்கும்போது மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். மேலும் இது மழையின் அளவை சுமார் 5-15 சதவீதம் வரை அதிகரிக்கும்.
மேக விதைப்பு எப்படி செயல்படுகிறது?
மழை மேகங்கள் இருக்கும்போது அதில் சில கெமிக்கல் சேர்க்கும்போது மழை அல்லது பனிப்பொழிவை அதிகரிக்க முடியும். வெள்ளி அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு, ட்ரை ஐஸ் அல்லது உப்பு ஆகியவை நீராவியை ஈர்க்கும் கருக்களாகச் செயல்படுகின்றன. நீராவியானது இந்தத் துகள்களைச் சுற்றிச் சேரும்போது மழை அல்லது பனிப்பொழிவு அதிகரிக்கும்.
மேக விதைப்பில் பொதுவாக இரண்டு வகை உள்ளன.. அதில் ஒன்று குளிர் மேக விதைப்பு.. சில்வர் அயோடைடு அதிக குளிரூட்டப்பட்ட மேகங்களில் (0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே) சேரும்போது அது பனிக்கட்டி படிகங்கள் உருவாக உதவுகிறது. மற்றொன்று வெப்ப மேக விதைப்பு.. இதில் உப்புத் துகள்கள் பயன்படுத்தப்படுகிறது. அவை சிறிய மழைத் துளிகளைப் பெரிய மழைத்துளிகளாக ஒன்றிணைக்க உதவுகின்றன. இதன் மூலம் நமக்கு மழை கிடைக்கும்.
மேக விதைப்பு பலன் தருமா?
இதுவரை மேக விதைப்பு ஓரளவுக்குப் பயனுள்ளதாகவே கருதப்படுகிறது. சரியான சூழ்நிலையில், இது மழையின் அளவை அல்லது பனிப்பொழிவைச் சுமார் 5- 15 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் மேற்குப் பகுதி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில், மேக விதைப்பு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு மழையை அதிகரித்துள்ளது. 14 சதவீதம் வரை மழை அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இருப்பினும், எல்லா முறையும் 15% வரை மேக விதைப்பு பலன்கள் அதிகரிக்கும் எனச் சொல்ல முடியாது. வானிலை, அங்கு என்ன சூழல் இருக்கிறது எனப் பல்வேறு விஷயங்களைப் பொறுத்து இது மாறுபடும். இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மேக விதைப்பு மூலம் 3 சதவீதம் மட்டுமே மழை அதிகரித்தது. மேலும், பொருத்தமான மேகங்கள் ஏற்கனவே இருந்தால் மட்டுமே இந்த நுட்பம் வேலை செய்யும். ஈரப்பதம் நிறைந்த அல்லது அதிக குளிரூட்டப்பட்ட மேக அமைப்புகளில் மட்டுமே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications