மூச்சு திணறும் டெல்லி.. உச்சத்தை தொட்ட காற்று மாசு! மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு உத்தரவு
டெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லியில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் செழிப்பாக இருக்கிறது. விவசாய ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இந்த கழிவு எரிப்பு மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. காற்றின் தரம் (AQI) 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. ஆனால் டெல்லியில் மாசு 400ஐ தாண்டியிருக்கிறது.

கடும் பனிமூட்டமும், காற்று மாசும் சேர்ந்து டெல்லி மக்களை வாட்டி வதைக்கிறது. டெல்லியில் ஒவ்வொருவரும் சுமார் 33 சிகரெட்டுகளை புகைக்கும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது சுவாச கோளாறு, கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மறுபுறம் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்களில் 115 தாமதமாக வந்து சேர்ந்திருக்கின்றன. அதேபோல இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களிலும் 226 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றிருக்கின்றன. இப்படியாக காற்று மாசு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.
இப்படி இருக்கையில் டெல்லியில் 1-5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் சொல்லித்தர டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது எதிர்கொள்ளும் காற்று மாசு சிக்கல் இதன் மூலம் குறையும் என்றும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. அதேபோல மாணவர்களுக்கான உடற்கல்வி வகுப்புகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
டெல்லியில் 39 காற்று மாசு மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். நேற்று இதில் 32 மையங்களில் மாசு 400ஐ கடந்திருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஆனந்த் விஹார் (441), துவாரகா (444), முண்ட்கா (449), ஆர்கே புரம் (437), இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (446) ஆகிய இடங்களில் காற்று மாசு அதிகமாக பதிவாகியுள்ளது.
தற்போது டெல்லியில் அனைத்து வகை கட்டுமான பணிகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமான பணிகள் மூலம் ஏற்படும் காற்று மாசை இதன் மூலம் குறையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications