ஒரு ஃபைல் கூட வெளியே போக கூடாது.. ரிசல்ட் வரும்போதே டெல்லி தலைமை செயலகத்தை கண்ட்ரோலில் எடுத்த பாஜக!
டெல்லி: டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்ல பொது நிர்வாகத்துறை தடை வித்துள்ளது. ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், மின்னணு கோப்புகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பொது நிர்வாகத்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளின்படி, பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர். டெல்லி சட்டமன்றத்தில், 27 ஆண்டுகளுக்குப் பிறகூ பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்று பேசுகையில், "இன்றைய வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது சாதாரண வெற்றி அல்ல. டெல்லி மக்கள் பேரழிவை விரட்டியடித்துள்ளனர் " என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, டெல்லியில் பாஜக வெற்றி அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தபோதே பொது நிர்வாகத்துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், மின்னணு கோப்புகளை எடுத்துச் செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் உத்தரவின்படி, டெல்லி அரசின் பொது நிர்வாகத்துறை ஒரு சர்குலரை அனுப்பியுள்ளது. பதிவுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பொது நிர்வாகத்துறையின் அனுமதியின்றி எந்த கோப்புகள் அல்லது ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை டெல்லி தலைமைச் செயலக வளாகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள துறைகள், அலுவலகங்களின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட கிளைப் பொறுப்பாளர்களுக்கு, அவர்களின் பிரிவுகள் /கிளைகளின் கீழ் உள்ள பதிவுகள், கோப்புகள், ஆவணங்கள், மின்னணு கோப்புகள் போன்றவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி தலைமை செயலகத்துக்குள் வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக அதிக இடங்களில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியதுமே, தலைமைச் செயலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விட்டதாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி இன்று வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பேசுகையில், "டெல்லியில் நடந்த ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும். கொள்ளையடிக்கப்பட்டது எல்லாம் திரும்பக் கொண்டுவரப்படும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications