பிரதமர் அலுவலகம் முற்றுகை.. காங்கிரஸ் கட்சியினரை தடுக்க போலீஸ் குவிப்பு.. பரபர டெல்லி
டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் போராட்டம் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
மத்தியில் பாஜக ஆட்சி நடத்தும் நிலையில் எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதோடு பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக அவர்கள் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

இந்தியா முழுவதும் சோதனை
இந்நிலையில் தான் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவததோடு, ஆளுவர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளனர்.

டெல்லியில் போராட்டம்
டெல்லியை பொறுத்தமட்டில் போராட்டம் நடத்தும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இன்று காலை முதலே அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளனர். எம்பிக்கள், மூத்த தலைவர்களும் அங்கு திரண்டுள்ளனர். இதனால் போராட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

பிரதமர் இல்லம் முற்றுகை
மேலும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்பிக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை தடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

எச்சரிக்கை நோட்டீஸ்- போலீஸ் குவிப்பு
முன்னெச்சரிக்கையாக போராட்டத்துக்கு அனுமதி வழங்காத போலீசார் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இதனை மீறி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் டெல்லியின் பல இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு
இதற்கிடையே டெல்லி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். இந்த வேளையில் புள்ளி விபரங்களோடு மத்திய அரசை அவர் விமர்சனம் செய்ய உள்ளார். இந்த சந்திப்பு பிறகு போராட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications