துண்டு, துண்டாக வெட்டி டிரைவர் கொடூர கொலை... டெல்லியில் லிவிங் டூ கெதர் ஜோடி வெறிச்செயல்
Recommended Video

டெல்லி: டெல்லியில் உபேர் கால் டாக்சி ஒட்டுநரை கொன்று உடலை சிறிய துண்டுகளாக வெட்டி, சாக்கடையில் வீசிய லிவிங் டூ கெதர் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: டெல்லியின் ஷகார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த். இவர் உபேர் நிறுவனத்தில் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த வாரம் முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. தொலைப்பேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து,
அவரது மனைவி ஷகார்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை
இது தொடர்பாக, டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு கோவிந்த் எங்கிருக்கிறார் என்ற எந்த தடயமும் கிடைக்கவில்லை. கோவிந்த்தின் கார், கடைசியாக மதன்கிரியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் கபாசேரா பார்டருக்கு முன்பதிவு
செய்யப்பட்டிருந்தது. கபாசேரா சென்ற பிறகு காரின் ஜிபிஎஸ் கருவி வேலை செய்யாமல் இருந்துள்ளது.

சிசிடிவி கேமரா
இதையடுத்து சிசிடிவி கேமரா உதவியுடன் கோவிந்தின் கார் மற்றும் மொபைலை போலீசார் தேடினர். இந்நிலையில் மெகருலி, குருகிராம் இடையே கோவிந்தின் கார் மற்றும் மொபைலுடன் ஒரு ஜோடி சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த ஜோடியை பிடித்த போலீசார், விசாரணை நடத்தினர்.

குற்றவாளிகள் கைது
காரில் சென்ற ஜோடி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பரகத் அலி என்ற அம்ரோகா (34) மற்றும் அவரது காதலி சீமா சர்மா (30) என்பது தெரியவந்தது. இருவரும் டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் கொள்ளை அடித்துவிட்டு கொலை செய்து வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பரகத் அலி ஜோடி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மயக்க மருந்து கலந்த டீ
அப்போது சில அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த ஜனவரி 29ம் தேதி எம்ஜி ரோட்டில் இருந்து காஜியாபாத் செல்வதற்காக பரகத் அலி மற்றும் அவரது காதலியும் கோவிந்தின் காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். செல்லும் வழியில், கோவிந்துக்கு மயக்க மருந்து கலந்த டீ மற்றும் பிஸ்கட்டை சீமா சர்மா கொடுத்துள்ளார் அதை குடித்த கோவிந்த் மயங்கிவிட்டார்.

சாக்கடையில் வீச்சு
இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறித்த பரகத் அலி ஜோடி, கோவிந்தை கொலை செய்தனர். அடுத்த நாள் (ஜன.30)
கோவிந்தின் உடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியுள்ளனர். பின்னர் அந்த உடல் துண்டுகளை சிறிய பண்டலாக கட்டியுள்ளனர். அந்த பண்டல்களை கிரேட்டர் நொய்டாவில் சாக்கடையில் வீசியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

கார், செல் பறிமுதல்
இந்நிலையில் கோவிந்தின் மனைவி அளித்த புகாரை தொடர்ந்து, சிசிடிவி கேமரா உதவியால் பரகத் அலி மற்றும் சீமா சர்மா ஜோடி சிக்கிக்கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் வாழ்ககை வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஹுண்டாய் எக்சன்ட் கார் மற்றும் கோவிந்தின் மொபைல்கள் ஆகியவற்றை போலீசார்
மீட்டனர். அவர்கள் பணத்துக்காக கோவிந்தை கொடூரமாக கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications