எட்டு தாலி கட்டி.. 8 கணவனையும் தூக்கி போட்டு மிதித்து மகிழ்ந்த மனைவி.. மேடம் பேரு ஜோதி.. டெல்லியில்
டெல்லி: டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய கணவரை கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தியிருக்கிறார்.. தன்னுடைய மனைவியை பற்றி, பாதிக்கப்பட்ட கணவன் போலீசில் தந்துள்ள வாக்குமூலம், ஒட்டுமொத்த பேரையும் நடுநடுங்க செய்துள்ளது.. இது தொடர்பாக போலீசாரும் துரிதமான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக தெரிகிறது.. என்ன நடந்தது தலைநகர் டெல்லியில்?
டெல்லியை சேர்ந்த நபரின் பெயர் சூரஜ்.. இவரது மனைவி பெயர் ஜோதி. கடந்த டிசம்பர் 2023ல், ஒரு ஜாக்ரன் நிகழ்வில் ஜோதியை முதன்மதலாக சந்தித்துள்ளார்.. நேருக்கு நேர் பார்த்ததுமே ஒருவரையொருவர் பிடித்து போயிருக்கிறது..

செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டு பேச ஆரம்பித்துள்ளனர்.. டிசம்பர் 30 ம் தேதியன்று, இருவரும் வெளியே சென்று தங்கி நெருக்கமாகி உள்ளனர்.. சில வாரங்களுக்கு பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அபார்ஷன் செய்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று டாக்டர்கள் கூறுவதாகவும் சூரஜ்ஜிடம் கூறியிருக்கிறார்.
பாலியல் பலாத்கார வழக்கு
அதுமட்டுமல்ல, தன்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளாவிட்டால், பொய்யான பாலியல் பலாத்கார வழக்குத் தொடுப்பதாகவும் மிரட்டியிருக்கிறார்.. இதைக்கேட்டு பயந்துபோன சூரஜ், பிப்ரவரி 14, 2024 அன்று ஒரு கோவிலில் ஜோதியை திருமணம் செய்து கொண்டார்.. தாலி கட்டியதுமே, தனிக்குடித்தனம் கேட்டார் ஜோதி.. அதற்கு சூரஜ் ஒப்புக் கொண்டார்..
பிறகு ஜோதியின் ஸ்கேன் ரிப்போர்ட் ஒன்றை சூரஜ் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். காரணம், ஜோதியை முதன்முதலில் சந்தித்தபோதே, அவர் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.. இதுகுறித்து ஜோதியிடம் சூரஜ் கேட்டதற்கு, ஸ்கேன் ரிப்போர்ட் தவறு என்று சொன்னாராம்.. அதற்கு பிறகே ஜோதியின் கடந்த காலத்தை ஆராய்ந்துள்ளார் சூரஜ்..
பெண் குழந்தை
ஜோதிக்கு செப்டம்பர் 13, 2024 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.. அந்த குழந்தையையும் சூரஜ்தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில்தான், ஜனவரி 1, 2025 அன்று, சூரஜ் மீது மிளகாய் பொடி கலந்த சுடுநீரை ஊற்றிவிட்டார் ஜோதி.. பிறகு, குழந்தையையும், சூரஜ்ஜையும் ரூமுக்குள் வைத்து பூட்டிக் கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பிறகு ஒருவழியாக அங்கிருந்து தப்பிய சூரஜ், மூன்றரை மாத குழந்தையை தன்னுடைய அம்மாவின் பொறுப்பில் விட்டுள்ளார்.. இப்போது சிகிச்சையிலும் உள்ளார்.
இப்போது சூரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. செய்தியாளர்களிடம் சூரஜ் பேசும்போது, தான் எவ்வாறு மனைவியால் சித்திரவதை செய்யப்பட்டேன் என்பதை விவரித்திருக்கிறார்.
மிளகாய் தூள் - சுடுதண்ணீர்
"என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்தார்.. திருமணம் நடந்ததுமே, என்னுடைய குடும்பத்திலிருந்து திட்டமிட்டு என்னை பிரித்துவிட்டார்.. என்னுடைய குடும்பத்தினருடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாதவாறு நிர்ப்பந்தித்தார்.. ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சித்ரவதை அதிகமாக தொடங்கியதும்தான், ஜோதியின் அதிர்ச்சியூட்டும் கடந்த காலம் குறித்து விஷயங்கள் தாமதமாகவே எனக்கு தெரியவந்தன.
ஜோதிக்கு ஏற்கனவே 7 முறை திருமணமாகியிருக்கிறது. ஆனால், 7 திருமணத்தையும் என்னிடமிருந்து மறைத்துவிட்டார்.. அதாவது, ஆண்களை தன்னுடைய காதல் வலையில் சிக்க வைப்பார்.. பிறகு அந்நபரை திருமணம் செய்து கொள்வார்.. அடுத்த சில நாட்களிலேயே, அந்த கணவன்கள், தாங்களாகவே வெளியேறும்படி டார்ச்சரை ஆரம்பிப்பார்..
ஓடிப்போன கணவன்கள்
அப்படி மனைவி தொல்லை தாங்காமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதுமே, பணம், சட்டச் செலவுகள் அல்லது ஏதாவது நிதி தீர்வை கேட்டு கோர்ட்டுக்கு போவார். இப்படித்தான் 7 கணவன்களிடமும் செய்திருக்கிறார்.
கடந்த புத்தாண்டு தினத்தன்று நான் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, பக்கெட் நிறைய சுடுநீரை ஊற்றி, அதில் மிளகாய் தூள், உப்பு கரைத்து, அதை என் மீது கொதிக்க கொதிக்க ஊற்றினார்.. இப்போதுகூட என் போனை பிடுங்கிக்கொண்டு, கதவை வெளிப்பக்கமாக பூட்டிக் கொண்டு ஓடிவிட்டாள்.. நான் கதவை திறக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்.. ரூமில் நான் உதவி உதவி என்று கத்தி கொண்டேயிருந்தேன்.. ஆனால் என்னுடைய சத்தம் யாருக்குமே கேட்கவில்லை.. பிறகு ஜன்னலை உடைத்து எப்படியோ தப்பித்தேன்" என்கிறார் சூரஜ்.












Click it and Unblock the Notifications