டெல்லி இளம்பெண் வழக்கில் புதிய ட்விஸ்ட்.. தனியாக செல்லவில்லை..விபத்து நடந்ததும் தப்பி ஓடிய தோழி?
டெல்லி: தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் காரில் பல கி.மீட்டர் தொலைவுக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்தின் போது இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை என்றும் தனது தோழியுடன் பயணித்தாகவும் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.
Recommended Video
தலைநகர் டெல்லியின் அமன்விகார் பகுதியை சேர்ந்த இளம்பெண் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் வந்தபோது எதிரே வந்த மாருதி பலேனா கார் ஒன்று ஸ்கூட்டி மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதோடு இளம்பெண்ணின் கால் காரின் டயரில் சிக்கிக் கொண்டது. ஆனாலும் காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச்சென்ற கொடூரம் நடந்துள்ளது.

போலீசார் உரிய நேரத்தில் வரவில்லை
அதாவது பெண்ணின் சடலத்தை சாலையில் தரதரவென இழுத்தபடி சுமார் 12 கி.மீட்டர் கார் சென்றுள்ளது. பெண் ஒருவரின் உடலை ரோட்டில் இழுத்துக்கொண்டு கார் செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். ஆனாலும் போலீசார் உரிய நேரத்தில் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, கஞ்சவாலா பகுதியில் சாலையில் ஆடைகள் கிழிந்து நிர்வாணமாக பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு மீண்டும் அழைப்பு வந்தது.

5 பேர் கைது
அப்போது வந்த போலீசார் பெண் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். இதில் விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் பெண்ணின் உடலுடன் வேகமாக சென்றது தெரியவந்தது. இதையடுத்து காரின் ஓட்டுநர் உள்பட காரில் பயணம் செய்த 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இளம்பெண் இழுத்துச்செல்லப்படும் காரின் பதிவுகள் அடங்கிய சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதைபதைக்க வைத்தது. டெல்லியில் கடும் கொந்தளிப்பையும் அதிர்வலைகளையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரமுகர்
காரில் இருந்தவர்களின் செயல் மிருகத்தனமானது என்று பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக தெரிவித்தார். மேலும், இளம்பெண் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ் மிட்டல் என்பவர் பாஜக பிரமுகர் என்றும் டெல்லி போலீஸ் இதை திட்டமிட்டு மறைக்கிறது என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.

தோழியுடன் ஸ்கூட்டியில் வந்ததாக
எனினும், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா தெரிவித்துள்ளார். டெல்லி இளம்பெண் மரண விவகாரம் கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதாவது விபத்தில் சிக்கிய இளம் பெண் தனது தோழியுடன் ஸ்கூட்டியில் வந்ததாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விபத்து குறித்து ஏன் தெரிவிக்கவில்லை
விபத்து நடைபெற்றதும் உடன் வந்த தோழி, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஒடி தனது வீட்டிற்கு சென்று விட்டதாகவும் விபத்தில் அவரும் காயம் அடைந்ததாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும், விபத்து நடைபெற்ற இடத்தில் தோழி இருந்தது உண்மையாக இருந்தால் அவர் ஏன் விபத்து குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன

தோழியுடன் இருக்கும் சிசிடிவி காட்சிகள்
இதற்கிடையே, ஓட்டல் ஒன்றில் இருந்து இளம்பெண்ணும் அவரது தோழியும் ஒன்றாக வெளிவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. முதலில் ஸ்கூட்டியை இளம்பெண்ணின் தோழி ஒட்டிச்செல்ல பாதி வழியில் இளம்பெண் வண்டியை தானே ஓட்டுவதாக வாங்கி ஒட்டிச்செல்கிறார். இந்தக் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications