குக்கரால் தலையில் அடித்து... காதலியின் தந்தை படுகொலை ... காதலன் வெறிச்செயல்!
டெல்லி: டெல்லியில் காதலியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தையை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியும், குக்கரால் தலையில் அடித்தும் கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டு தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தலைநகர் டெல்லியில் சோனியா விஹார் பகுதியை சேர்ந்தவர் பிஜேந்தர் சிங்(50). இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பிஜேந்தர் சிங், 24 வயது இளம்பெண் ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வந்தார். அந்த பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த சூரஜ் குமார் குமார்(25) என்பவரும் காதலித்து வந்தனர்.

இது குறித்து வளர்ப்பு பெற்றோர்களான பிஜேந்தர் சிங்கும், அவரது மனைவியும் கண்டித்தனர். ஆனால் அந்த பெண் சூரஜுடன் பழகுவதை நிறுத்தாததால் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அவளை பெற்றெடுத்த தாய்-தந்தையிடம் விட்டனர். அப்போது உபியில் உள்ள அந்த பெண்ணின் உண்மையான பெற்றோரிடம் சூரஜின் பெற்றோர் பெண் கேட்டு சென்றனர். ஆனால் பிஜேந்தர் சிங், இளம்பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சூரஜ் பிஜேந்தர் சிங்கை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி சூரஜ் பிஜேந்தர் சிங்கின் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தி, குக்கரை எடுத்து மண்டையில் அடித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சூரஜ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!












Click it and Unblock the Notifications