டெல்லியில் மிக மோசமான தீ விபத்து.. 800 குடிசைகள் எரிந்து நாசம்.. இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
டெல்லி: டெல்லி ரோஹினியின் செக்டார் 17இல் அமைந்துள்ள ஒரு குடிசைப் பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ, படுவேகமாக மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 800க்கும் மேற்பட்ட குடிசைகள் நாசமடைந்துள்ளன.
நமது நாட்டில் இன்னுமே பல இடங்களில் மக்கள் குடிசைகளில் தான் வாழ்கிறார்கள். வெயிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும் குடிசையில் வாழ்வோரின் பாடு திண்டாட்டம் தான். குடிசைகளுக்குப் பதிலாக கான்கரீட் வீடுகளை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுத்தாலும் அது இன்னும் முழுமை பெறவில்லை. மறுபுறம் குடிசைப் பகுதிகளில் விபத்துகளும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.

டெல்லி தீ விபத்து
அப்படித் தான் இன்று டெல்லியில் மிக மோசமான ஒரு விபத்து நடந்துள்ளது. டெல்லி ரோஹினியின் செக்டார் 17இல் அமைந்துள்ள ஒரு குடிசைப் பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ, படுவேகமாக மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இந்த மோசமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரின் உடல்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
என்ன நடந்தது
இது தொடர்பாகத் தீயணைப்புத் துறை அதிகாரி சட்டோபாத்யாய் கூறுகையில், "பகல் 11:55 மணிக்கு எங்களுக்கு தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் -5 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். இங்குப் பாதைகள் குறுகலாக இருந்ததால்... தீ ஏற்பட்ட இடத்தை எங்கள் வாகனங்களால் அடைய முடியவில்லை. தீயின் தீவிரத்தைக் கண்டு, கூடுதல் வாகனங்களை அங்கு அனுப்பினோம்.
மொத்தம் 26 வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன... தீக்காயங்களுடன் இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர், அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்... தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்து வருகிறார்கள்" என்றார்.
காரணம் என்ன
அந்தப் பகுதியில் முதலில் ஒரு குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. பிறகு அந்த தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியுள்ளது. அதேநேரம் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீசார் இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று டெல்லியில் அதீத வெப்பம் பதிவாகி இருந்தது. அதுவும் கூட தீ மளமளவென பரவ காரணமாக இருந்திருக்கலாம். மேலும், இந்த விபத்தில் அந்தப் பகுதியில் இருந்த 800+ குடிசைகள் நாசமாகின. இதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
ஸ்தம்பித்த டெல்லி.. இனி இளைஞர்கள் பயப்படமாட்டார்கள்.. CJP பதிவால் மத்திய அரசு ஷாக்! -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications