தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கணும்னா.. பாஜக அரசுக்கு திமுக போடும் 3 முக்கிய கண்டிஷன்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த மசோதாவை ஆதரிக்க திமுக 3 நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவால் வெளியாகியுள்ளது.

நாடாளு​மன்ற மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை​யில் பாஜக தலைமையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி பெரும்​பான்​மை​யுடன் இருந்​தா​லும், தொகுதி மறு​வரையறை உள்​ளிட்ட திருத்த மசோ​தாக்​களை நிறை​வேற்​றும் போது இந்​திய அரசி​யலமைப்​பின் 369-வது பிரி​வின் கீழ் ஒட்டுமொத்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களில் 3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்​களின் ஆதரவு தேவை.

Delimitation Bill

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறு​வரையறை மசோதா கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற நாடாளு​மன்​றக் கூட்​டத் தொடரில் தோல்வி அடைந்​தது. இந்நிலை​யில், இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாதம் 16, 17, 18 ஆம் தேதி​களில் தொகுதி மறு​வரையறை மசோ​தா, மகளிர் இடஒதுக்​கீட்டு திருத்த மசோ​தாக்​கள் தாக்​கல் செய்​யப்​படும் எனத் தெரி​கிறது. இதுதொடர்​பாக காங்​கிரஸ் உள்ளிட்ட எதிர்க்​கட்​சிகளுக்கு மத்​திய அரசு தகவல் தெரி​வித்​துள்​ள​து.

கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற இந்த மசோதா மீதான வாக்​கெடுப்​பின் போது 528 எம்​.பி.க்​கள் மக்​களவை​யில் இருந்​தனர். அதன்​படி, 352 பேரின் வாக்​கு​கள் இருந்​தால் மட்​டுமே மசோதா நிறை​வேறும் நிலை இருந்​தது. ஆனால், மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 வாக்​கு​களும், எதி​ராக 230 வாக்​கு​களும் கிடைத்​தன. இதனால் மசோதா தோல்வி அடைந்​தது.

இந்த முறை மசோதா தோல்வி அடை​யாமல் இருக்க எதிர்க்​கட்​சிகள் மத்​தியில் ஒரு​மித்த கருத்தை ஏற்​படுத்த மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. தற்​போது மக்​களவை​யில் மத்​திய அரசுக்​குப் போது​மான பலம் உள்​ளது. அதே​போல் மாநிலங்​களவை​யில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்​டிக்​குத் தேவை​யான எம்​.பிக்​களின் எண்​ணிக்​கை​யைத் தேசிய ஜனநாயகக் கூட்​டணி நெருங்​கியுள்​ளது. எனவே, இம்​முறை 2 மசோ​தாக்​களையும் நிறை​வேற்ற பாஜக தீவிரமாக உள்ளது.

புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவருவது குறித்து மத்திய பாஜக அரசு பரிசீலித்து வரும் நிலையில், அம்மசோதாவை ஆதரிப்பதற்கு திமுக மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1971-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு விதிக்கப்பட்டுள்ள முடக்கம் (freeze), 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு முடிவுக்கு வரவுள்ளது. இந்த முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது திமுகவின் விருப்பம்.

அதேசமயம், அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்களை 50% அளவுக்கு உயர்த்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்துகிறது. ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​உள்துறை அமைச்சர் அமித் ஷா இத்தகைய சீட் உயர்வை வாய்மொழியாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தச் சட்டத் திருத்தத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்த விவரப் பட்டியலையும் திமுக கோருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், தொகுதி மறுவரையறை மசோதா அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்பட்ட பின்னரே, அதனை ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்த இறுதி முடிவை எடுப்போம் என்ற நிலைப்பாட்டில் திமுக தொடர்ந்து உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+