மக்கள்தொகை கூடுவது நல்லது.. உபி, பீகார் விஷயம் நல்ல அறிகுறி.. சொல்வது ஆந்திர முதல்வர் சந்திரபாபு!
டெல்லி: "உத்தர பிரதேசம், பீகாரில் மக்கள்தொகை அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தான், தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்" என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அதன் பின்னர், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, "உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் வயதான மக்கள்தொகையுடன் போராடி வருகின்றன. தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நான், தற்போது என் நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான்.
வயதான மக்கள் தொகை ஒரு பிரச்சனை. ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனாவில் வயதான பிரச்சனை உள்ளது. வட இந்தியா, பீகார் மற்றும் உ.பி.யில் மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அது வரவேற்கத்தக்க அறிகுறி. மக்கள் தொகை பெருக்கம் முக்கியம். நமக்குத் தேவையானது மக்கள்தொகை மேலாண்மை தான்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனை எப்படி கணக்கிடுவது என்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சரியான நேரத்தில் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்யும். இதுவரை எந்த மசோதாவும் இல்லை. அனுமானங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை." என்றார்.
அதிக மக்கள் தொகை என்பது அதிக எம்.பி.க்களைப் பெறுவதற்கான அளவுகோல், "நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மக்கள்தொகை அடிப்படையில் இருக்கும்" என்பதால், திருமணத்திற்குப் பிறகு இளம் தம்பதிகள் உடனடியாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தென் மாநில எம்.பிக்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்த தற்போதைய சர்ச்சை குறித்த கேள்விக்கு, நாட்டில் உள்ள மக்களுடன் பழகுவதற்கு "இந்தி கற்றுக்கொள்வது நல்லது" என்று தெரிவித்தார். மேலும், மூன்று மொழிகளை மட்டுமல்ல, பல மொழிகளையும் கற்க வேண்டும், வாழ்வாதாரத்திற்கான ஒரு சர்வதேச மொழியாக இருப்பதால் ஆங்கிலத்தை ஊக்குவிக்க விரும்புவதாகவும், தெலுங்கு தனது மாநிலத்தில் தாய்மொழியாக ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய சந்திரபாபு நாயுடு, "இன்று மிக முக்கிய 3 சந்திப்புகள் நடைபெற்றன. அதில், ஒன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன். இது இரு கட்சிகளின் இடையே நடக்கும் வழக்கமான சந்திப்பு தான். எங்களின் யோசனைகளை பரிமாறிக் கொண்டதுடன், என்.டி.ஏ கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பின் போது, ராயலசீமாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயனடையும் வகையில் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப்பது குறித்து விவாதித்தோம்.
சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியுடனான சந்திப்பின் போது, ஆந்திரப் பிரதேசத்தில் கட்டுமானத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளையும், எட்டு வழிச்சாலைகள் மற்றும் சேவை சாலைகளைக் கொண்ட அமராவதியில் 189 கி.மீ நீளமுள்ள வெளிப்புற வட்டச் சாலையையும் அமைப்பது தொடர்பாக பேசினேன்" என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications