டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயமுறுத்தும் "டெல்டா பிளஸ்" கொரோனா.. கேரளா உட்பட.. பல மாநிலங்களில் வரிசையாக பதிவாகும் கேஸ்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் டெல்டா பிளஸ் எனப்படும், உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. 3வது அலையை இந்த வகை வைரஸ் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

Recommended Video

    புதிய Lambda Corona பற்றி தெரியுமா? 29 நாடுகளுக்கு பரவிய New Variant | OneIndia Tamil

    மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் பாதிப்புடன் 21 கேஸ்கள் பதிவாகியுள்ளன. கேரளாவில் டெல்டா பிளஸ் பாதிப்புடன் 3 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அச்சாணி கழன்ற வண்டியாக காங்....6 மாநிலங்களில் உச்சத்தில் உட்கட்சி மோதல்- தடுமாறும் சோனியா குடும்பம் அச்சாணி கழன்ற வண்டியாக காங்....6 மாநிலங்களில் உச்சத்தில் உட்கட்சி மோதல்- தடுமாறும் சோனியா குடும்பம்

    மத்திய பிரதேசத்திலும் டெல்டா பிளஸ் பாதிப்புள்ள நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனராம்.

    டெல்டா பிளஸ் என்றால் என்ன?

    டெல்டா பிளஸ் என்றால் என்ன?

    இன்னும் பல மாநிலங்களில் இது குறித்து தெரியாமல் பரவியருக்கலாம் என்று கூறப்படுகிறது. உருமாற்றம் அடைந்த கொரோனாவான டெல்டா காரணமாகத்தான், இந்தியாவில் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அது இப்போது கட்டுக்குள் வந்த நிலையில், டெல்டா உருமாற்றம் அடைந்துள்ளது. டெல்டா வகை கொரோனாவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 ஆக மாறி உள்ளது. இந்த B.1.617.2.1 கொரோனா டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது.

    தடுப்பூசி போட்டவர்கள்

    தடுப்பூசி போட்டவர்கள்

    இந்த டெல்டா + வகை கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்க கூடிய ஆபத்து உள்ளதாக வைரலாஜி மருத்துவரும், சார்ஸ் கோவிட் ஜீனோம் ஆராய்ச்சி குழுவின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் ஷாஹித் ஜமீல் எச்சரித்துள்ளார்.

     10 நாடுகள்

    10 நாடுகள்

    இதனிடையே, இன்று மாலை அளித்த பேட்டியில், இந்தியா உட்பட 10 நாடுகளில் டெல்டா பிளஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். பேட்டியின்போது அவர் கூறுகையில், வழக்கமான டெல்டா உருமாறிய கொரோனாவைத் தவிர இந்தியாவில் 22 க்கும் மேற்பட்ட டெல்டா பிளஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

    பிற நாடுகள்

    பிற நாடுகள்

    அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றிலும் டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில், டெல்டா பிளஸ் 22 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 16 கேஸ்கள் ரத்னகிரி மற்றும் ஜல்கான் (மகாராஷ்டிரா) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    In India the Delta Plus, corona spread has increased. In Maharashtra, 21 cases have been reported with Delta Plus. In Kerala, 3 patients with Delta Plus infection are being treated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X