அடடே சூப்பர்! 10 நாட்களில் ஒரு கோடி தேசிய கொடிகளை விற்ற தபால் துறை! மூவர்ண கொடியை எப்படி வாங்கணும்?
டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாகத் தபால் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இந்தாண்டு உடன் 75 ஆண்டுகள் ஆகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை இந்தியா கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டு, ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதற்காக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டெல்லி செங்கோட்டைத் தொடங்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

75ஆவது சுதந்திர தின விழா
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். மேலும், 75ஆவது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தபால் துறை
பிரதமர் மோடியின் அழைப்பைத் தொடர்ந்து தேசியக் கொடிகளைப் பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தியத் தபால் துறை சார்பிலும் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 10 நாட்களில் மட்டும் இந்தியத் தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு கோடி தேசியக் கொடிகள்
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தபால் துறை அதன் 1.5 லட்சம் அலுவலகங்களின் நெட்வோர்க் மூலம் ஒவ்வொரு குடிமகனிடம் தேசியக் கொடிகளைக் கொண்டு சேர்கிறது. வெறும் 10 நாட்களுக்குள், ஆன்லைன் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இந்தியத் தபால் துறை 1 கோடிக்கும் அதிகமான தேசிய விற்பனையைச் செய்துள்ளது. இந்த கொடிகள் ₹ 25க்கு விற்பனை செய்யடுகிறது.

ஆன்லைன் ஆர்டர்
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு நாடு முழுவதும் இலவசமாகத் தேசியக் கொடிகளை டெலிவரி செய்கிறோம். ஆன்லைன் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் பொதுமக்களுக்குத் தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு. இதற்கு எங்கள் 4.2 லட்சம் தபால் ஊழியர்கள் பெரிய உதவியைச் செய்கிறார்கள்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
Recommended Video

எப்படி வாங்க வேண்டும்
தேசியக் கொடியை வாங்க விரும்புவோர், தபால் நிலையங்கள் மூலம் எளிதாக மூவர்ணக் கொடியைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அருகே உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று 25 ரூபாயைக் கொடுத்து தேசியக் கொடியைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் மூவர்ணக் கொடியுடன் செல்பி எடுத்து என்ற www.harghartiranga.com தளத்திலும் பதிவிடலாம்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தேசியக் கொடிகள் தபால் நிலையங்களில் கிடைக்கும்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications