உதவி ஆய்வாளர் தந்தை.. டிஎஸ்பி மகள்.. சல்யூட் அடித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம்.. வைரல் போட்டோ!
டெல்லி: உதவி ஆய்வாளராக இருந்து வரும் ஒருவர் டிஎஸ்பியாக தேர்ச்சி பெற்ற தனது மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என் நோற்றான் கொல்எனும் சொல்
இது திருவள்ளுவர் கூற்று. மக்கட்பேறு எனும் அதிகாரத்தில் அறப்பாலின் கீழ் உள்ளது. இவரை பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ர பெறும் பேறு என்பதுதான் இந்த குறளின் அர்த்தமாகும். இது தனது தந்தைக்கு உணர்த்தியுள்ளார் ஒரு பெண்.

உதவி ஆய்வாளர்
இந்தோ திபெத் எல்லை காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஏபிஎஸ் நிம்பாடியா. இவரது மகள் அபேக்ஷா நிம்பாடியா. இவர் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் காவல் அகாதெமியில் பட்டம் படித்தார். இங்கு படித்து முடித்தவுடன் நிம்பாடியா துணைக் காவல் கண்காணிப்பாளராக தேர்வு பெற்றார்.

பயிற்சி அகாதெமி
இதையடுத்து அவர் காவல் துறை பயிற்சி அகாதெமியில் பயிற்சி பெற்றார். பயிற்சி பெற்றவர்களுக்கு உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து அனுப்பும் பரேட் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களை இந்தோ திபெத் எல்லை காவல் படை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.

புகைப்படம் வைரல்
அதில் தனது தாய் பிம்லேஷ் நிம்பாடியாவுடன் மகள் அபேக்ஷா நிம்பாடியா இருக்கும் புகைப்படம் உள்ளது. அது போல் இன்னொரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அது உயரதிகாரியான மகளுக்கு உதவி ஆய்வாளரான தந்தை சல்யூட் அடிக்கும் நெகிழ்ச்சியான புகைப்படம். இருவரும் சிரித்துக் கொண்டே சல்யூட் அடிக்கிறார்கள்.

காவல் பணி
நிம்பாடியா குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக காவல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மிகவும் பெருமிதம் கொண்ட இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் தந்தையையும் மகளையும் பாராட்டி வருகிறார்கள். இந்தோ திபெத் எல்லை காவல் படை என்பது இந்திய சீனா போர் நடந்த போது உருவாக்கப்பட்டது. அதாவது 5 மத்திய ஆயுத காவல் படைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆந்திராவிலும் நெகிழ்ச்சி
இது போல் நிறைய ஆந்திராவில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காவலர் தேர்வில் வெற்றி பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். திருப்பதியில் ஒரு நிகழ்ச்சிக்கு பிரசாந்தி வருகை தந்தார். அப்போது அங்கிருந்த ஷியாம் சுந்தர் உயர் பொறுப்பில் உள்ள தனது மகளுக்கு சல்யூட் அடித்தார். இது காண்போரை நெகிழச் செய்தது. மேலும் தனது தந்தைதான் தனக்கு ரோல்மாடல் என்றும் தனக்கு சல்யூட் அடித்த போது தர்மசங்கடமாக இருந்ததாகவும் பிரசாந்தி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications