வெடித்து கிளம்பிய எதிர்ப்பு! தர்மேந்திர பிரதான் யூடர்ன்! திமுகவினர் குறித்த கருத்தை திரும்ப பெற்றார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் திமுகவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். அவரது கருத்துகளுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது கருத்தை திரும்பப்பெறுவதாக கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் திமுக எம்பிக்கள் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியிருந்தனர். எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் "தமிழகம் மும்மொழிக்கொள்கையை ஏற்க மாட்டோம்" என்று கூறினர். திமுக எம்பிக்களின் பேச்சு தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசினார்.

Dharmendra Pradhan dmk parliament

"பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் தமிழகம் சேர்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிக்கொண்டது. இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது? புதிய கல்விக்கொள்கை பற்றி சரியான புரிதல் தமிழகத்திற்கு இல்லை. தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழகம் கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டார். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அம்மாநில அரசு வஞ்சிக்கிறது.

திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். அம்மாநில மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். அம்மாநில மக்களுக்கும் அவர்கள் நியாயமானவர்களாக இல்லை" என்று காட்டமாக பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், "தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா?

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்" என்று தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கோவை, ராணிப்பேட்டையில் தர்மேந்திர பிரதானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. திமுகவினர் பிரதானின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் தனது கருத்தை பிரதான் திரும்ப பெற்றிருக்கிறார். "என்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அக்கருத்தை நான் திரும்ப பெற்றுக்கொள்கிறேன்" என்று மக்களவையில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+