டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியிடம் கைகொடுக்கவில்லை.. பொய் சொன்ன டிரம்ப்.. வெளியான ஆதாரம்.. வைரலாகும் புகைப்படம்!

இந்தியாவில் யாருக்கும் நான் கைகொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது முழுக்க முழுக்க பொய் என்று பலர் இணையத்தில் விமர்சித்து உள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் யாருக்கும் நான் கைகொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது முழுக்க முழுக்க பொய் என்று பலர் இணையத்தில் விமர்சித்து உள்ளனர்.

Recommended Video

    குழந்தைகளுக்கு வைரஸ் பரவாமல் இருக்க இதை கடைபிடிங்க |Some tips to safeguard your children from Corona

    கொரோனா வைரஸ் சீனாவில் கொஞ்சம் வேகம் குறைந்துள்ள நிலையில் இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. அதேபோல் அமெரிக்காவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதற்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக அதிபர் டிரம்ப் இந்த வைரசுக்கு எதிராக சரியாக செயல்படவில்லை. அவர் வைரஸை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டார் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க வேண்டுமா.. இதோ பயனுள்ள டிப்ஸ் கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க வேண்டுமா.. இதோ பயனுள்ள டிப்ஸ்

    என்ன உறுதி

    என்ன உறுதி

    இதெல்லாம் போக முத்தாய்ப்பாக அமெரிக்க அதிபரை சந்தித்த பிரேசில் அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பிரேசில் பிரதமர் ஜெயிர் போலிஸோனாரா அதிபர் டிரம்ப் உடன் சந்திப்பு நடத்தினார். இதில் பிரேசில் பிரதமரின் தகவல் தொடர்பு செயலாளர், பேஃபியோ வாஜ்கார்டன் கலந்து கொண்டார். இவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பெரிய சந்தேகம்

    பெரிய சந்தேகம்

    இதனால் டிரம்பிற்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. டிரம்ப் இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இந்த நிலையில்தான் டிரம்ப் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், எனக்கு கொரோனா இருக்கலாம் என்று சிலர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். இதுபற்றி எனக்கு கவலை இல்லை. நான் இந்தியாவில் இருந்து திரும்பி வந்த பிறகு யாரிடமும் கை குலுக்குவது இல்லை.

     வணக்கம் செய்கிறேன்

    வணக்கம் செய்கிறேன்

    இந்தியாவிலும் யாரிடமும் கைகுலுக்கவில்லை. இப்போதெல்லாம் தலைவர்கள் யாரிடமும் நான் கைகுலுக்குவது இல்லை. வணக்கம்தான் செலுத்துகிறேன். இதுவே எளிதாக இருக்கிறது. இதுதான் பாதுகாப்பானது என குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த மாதம் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். அவர் இந்தியாவில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

    என்ன சந்திப்பு

    என்ன சந்திப்பு

    இந்த சந்திப்பில் அதிபர் டிரம்ப் வரிசையாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா , தாஜ்மகாலில் தனக்கு வழி காட்டிய நபர் என்று எல்லோரிடமும் கை கொடுத்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் மோடியிடம் கை கொடுத்த புகைப்படங்கள் கூட வெளியாகி உள்ளது. ஆனால் டிரம்ப் நான் இந்தியாவிலும் யாரிடமும் கைகொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர் ஏன் இப்படி தவறாக பேசினார்.

    ஏன் இப்படி

    ஏன் வேண்டும் என்றே தான் கை கொடுத்ததை மறைத்து பொய் சொல்கிறார் என்று புகார் வைக்க தொடங்கி உள்ளனர். இதனால் இணையத்தில் டிரம்பை பலர் கலாய்க்க தொடங்கி உள்ளனர். டிரம்ப் செய்தது தவறு. அவர் கொரோனா போன்ற ஒரு வைரஸ் பரவும் போது இப்படி பொய் சொல்ல கூடாது. அவர் நேர்மையாக செயல்பட வேண்டிய நேரம் இது என்று பலர் அறிவுரை கொடுத்துள்ளனர்.

    English summary
    Coronavirus: Did Trump lie about shaking hands in India?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X