பத்து ரூவா நோட்டு தெரியும்.. அதென்ன ஜீரோ ரூபாய் நோட்டு?.. சிறப்பம்சங்கள் என்ன? முழு விவரம்!
டெல்லி: இந்தியாவில் ஜீரோ மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு இருக்கிறதை நீங்கள் அறிவீர்களா? அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
காலனா, அரையனா, ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய், ரூ 2, ரூ 5, ரூ 10, ரூ 20, ரூ 50, ரூ 100 உள்ளிட்ட இந்திய ரூபாய் நோட்டுகளையும் காயின்களையும் அனைவருக்கும் தெரியும்.
இதையடுத்து ரூ 500, ரூ 1000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தது. இ்நத நிலையில் கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ 500, ரூ 1000 செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

வங்கி
மேலும் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியிலோ அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்துவிட்டு புதிய ரூ 500, ரூ 2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக எத்தனையோ பேர் வங்கி வாசலிலும் போஸ்ட் ஆபீஸ் வாயிலிலும் காத்திருந்தனர். பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இதெல்லாம் சரி.. ஜீரோ ரூபாய் நோட்டை நீங்கள் பார்த்ததுண்டா?

ஜீரோ ரூபாய்
இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜீரோ ரூபாய் நோட்டுகள் உள்ளன. இவை ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டாலும் இவை புழக்கத்தில் இல்லாததால் பலருக்கு இதை பற்றி தெரியாது. இந்த நோட்டுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த ரூபாய் நோட்டு கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமாகிவிட்டது. தமிழகத்தை சேர்ந்த ஐந்தாவது தூண் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான் இந்த நோட்டை அறிமுகப்படுத்தியது. இது ஊழலை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது.

லஞ்சம்
நேர்மையற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடுக்க நோட்டின் பின்பக்கத்தில் உரிய அரசு அதிகாரிகளின் தொடர்பு விவரங்களுடன் ஜீரோ ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஊழல் செய்யும் ஒரு அதிகாரி லஞ்சம் கேட்டால் இந்த ஜீரோ ரூபாய் நோட்டை லஞ்சமாக கொடுங்கள் என மக்களை இந்த ஐந்தாவது தூண் ஊக்குவிக்கிறது.

எத்தனை மொழிகள்
இந்த நோட்டுகள் 30 மில்லியன் உள்ளன. இவை இந்தி, தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களுக்கு இந்த நோட்டை கொடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கவும் என்ர வாசகம் அதில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: https://5thpillar.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.












Click it and Unblock the Notifications