ஜூன் 21-க்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது!
டெல்லி: ஜூன் 21-ந் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
நாடு முழுவதும் 38,86,09,790 கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தகவல்கள் அடிப்படையில், மொத்தம் 37,31,88,834 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

கையிருப்பு தடுப்பூசிகள்
தற்போதைய நிலையில் 1,54,20,956 கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் சராசரி குறைந்து வருகிறது.

குறைய தொடங்கும் எண்ணிக்கை
ஜூன் 21-ந் தேதி முதல் ஜூன் 27-ந் தேதி வரையில் மொத்தம் சராசரியாக 61.14 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. ஜூன் 28-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரையிலான காலப் பகுதியில் இந்த சராசரியானது 41.92 லட்சம் பேராக குறைந்தது. அத்துடன் ஜூலை 5-ந் தேதி முதல் ஜூலை 11-ந் தேதி வரையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் சராசரி எண்ணிக்கையானது 34.32 லட்சமாக குறைந்துள்ளது.

பாதிப்பும் குணமடைந்தோரும்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தொடர்ந்து 15-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியைக் கடந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,00,14,713 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா குறையவில்லை என எச்சரிக்கை
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்களை ஜூன் 21-ந் தேதி முதல் மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை தொடருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளைப் போடுவதை விரைவாக செயல்படுத்த வேண்டும்; இன்னமும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications