டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயர்சாதியினர் ஏழைகளா? எப்படிங்க? 10% இடஒதுக்கீடு மிகப்பெரிய தவறு.. உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

Google Oneindia Tamil News

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு தருவது சரி என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக திமுக சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், ஒரு நீதிபதி இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

பெரும்பான்மை அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் இந்த தீர்ப்பு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

இந்த 10 சதவிகிதம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு பிரிவில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி. சி பிரிவை சேர்க்காதது தவறு கிடையாது என்று 3 நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர். தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பாட் ஆகியோர் இதை எதிர்த்து உள்ளனர். இந்த நிலையில் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு தருவது சரி என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக திமுக சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

தேசிய அளவில் இந்த தீர்ப்பு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. முக்கியமாக திமுக இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்தது. இந்த இடஒதுக்கீடு சமூக நீதிக்கான போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவு. சமூக நீதிக்கான போராட்டத்தில் மிகப்பெரிய இடர் இது. இதற்கு எதிராக கண்டிப்பாக திமுக சட்ட போராட்டத்தை மேற்கொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அதன்பின் அனைத்து கட்சி கூட்டமும் திமுக சார்பாக நடத்தப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டிற்கு எதிராக சட்ட போராட்டம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

வழக்கு

வழக்கு


இந்த நிலையில்தான் தற்போது, உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு தருவது சரி என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக திமுக சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக எம்பி வில்சன் சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த இடஒதுக்கீடுகளை வழங்குவதற்கு பொருளாதார அளவுகோல்கள் எப்படி கருதப்பட்டன ஏன் கருதப்பட்டன என்பதை மத்திய அரசு மேற்கொண்ட அரசியலமைப்பு சட்ட திருத்தம் நியாயப்படுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமியற்றி, எவ்வளவு இடஒதுக்கீடு வேண்டுமானாலும் கொண்டு வரலாம் என்று சொல்வது தவறு, இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.

ஏழைகள்

ஏழைகள்

இந்த இடஒதுக்கீடு காரணமாக உயர் சாதிகளில் உள்ள பெரும்பான்மையானோர் இடஒதுக்கீடு சுகத்தை அனுபவிக்கிறார்கள். ஏழைகள் என்ற தவறான பிம்பத்திற்குள் அவர்கள் மறைந்து கொண்டு இடஒதுக்கீடு சமூகம் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படவில்லை. வேலைகளில், கேள்விகளில் இருந்து அவர்கள் ஒதுக்கி வைக்கப்படவில்லை . அப்படி இருக்கும் போது இந்த இடஒதுக்கீடு அவசியம் இல்லை. உண்மையான weaker sections பிரிவான SC/ST/OBC பிரிவை நீக்கிவிட்டு ஒரு இடஒதுக்கீடு வருவதே அரசியலமைப்பு சட்டப்படி தவறானது.

திமுக

திமுக

உயர்சாதியினர் எப்படி weaker sections என்று அழைக்கப்பட முடியும். அவர்கள் ஏற்கனவே அரசு வேலைகள், போதிய கல்வி, வளங்களை பரம்பரை, பரம்பரையாக பெற்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் எப்படி வீக்கர் செக்சஸ் ஆக முடியும்.அதே சமயம் உண்மையில் பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருக்கும் ST, SC & OBC பிரிவினர் இதில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.இது சமத்துவத்திற்கு எதிரான சட்டம். இந்த இடஒதுக்கீடு சமத்துவத்தை கொடுக்கும் இடஒதுக்கீடு கிடையாது என்று திமுக தனது மனுவில் கூறியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

முன்னதாக இந்த இடஒதுக்கீட்டை அனுமதித்த 3 நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், பொருளாதார இடஒதுக்கீடு தவறானது, நியாயமற்றது என்று கூற முடியாது. ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடம் ஆகிவிட்டது. ஜாதி ரீதியிலான இடைஒதுக்கீட்டிற்கு ஒரு கால அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை தனி பிரிவாக கருதுவது நல்லதுதான். சமத்துவம் இல்லாத இடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவே இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்கீடு காரணமாக தனியாக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற பிரிவு உருவாகிறது. அதனால் அதில் மற்ற ஜாதி பிரிவினரை சேர்க்க வேண்டும் என்று கூற முடியாது. பொருளாதார ரீதியாக உருவாக்கப்படும் பிரிவே தனி பிரிவுதான். இதில் மற்ற ஜாதிகளை சேர்ப்பது அவசியமற்றது. சாதி ரீதியாக எங்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ அங்கெல்லாம் அதற்கு என்று ஒரு கால கெடு இருக்க வேண்டும். சாதி இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இத்தனை ஆண்டுகளுக்கு பின் இடஒதுக்கீடு கிடையாத என்று காலக்கெடு விதிக்க வேண்டும், அவர் தனது தீர்ப்பில் கருத்து தெரிவித்து உள்ளார்.

10% இட ஒதுக்கீடு..அரசியல் சாசன கட்டமைப்பை தகர்க்கிறது.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக சீராய்வு மனு 10% இட ஒதுக்கீடு..அரசியல் சாசன கட்டமைப்பை தகர்க்கிறது.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக சீராய்வு மனு

English summary
DMK files a review case against Economically Weaker Sections EWS quota verdict in Supreme Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X