மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு கனிமொழி எம்பி கடும் எதிர்ப்பு.. லோக்சபாவில் பரபரப்பு வாதம்
Recommended Video
டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகனச் (திருத்த) சட்ட மசோதா 2019 க்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா மாநிலங்களின் உரிமையில் தலையிடும் வகையில் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
விபத்துக்களை தடுக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 2019 மோட்டார் வாகன (திருத்த) சட்டத்தில் விதிமுறைகள் பல மிக கடுமையாக இருக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு தற்போது உள்ள அபராதத்தை விட பன்மடங்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்கிறது.

ஹெல்மெட் போடாவிட்டால்
குறிப்பாக காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வசூலிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹெல்மெட் அணியாவிட்டால். ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் 100ல் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ரூ.10 ஆயிரம் அபராதம்
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இனிமேல் 2000 ரூபாய்க்கு பதில் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வேகமாக வாகனத்தை ஓட்டுதல், ரேஸில்ஈடுபடுதல் போன்ற விதிமீறல்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இப்படி பல விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து துறையில் தனியாரை ஊக்குவிக்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

லோக்சபாவில் விவாதம்
லோக்சபாவில் இந்த மசோதாவை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்ட மசோதா மீது இன்று விவாதம் நடந்தது.

மாநிலங்களின் உரிமையில்
அப்போது திமுக எம்பி கனிமொழி விவாதத்தில் பேசுகையில், "இந்த மசோதா மாநிலங்களின் உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது. வாகன ஓட்டுனர்களுக்கு கல்வித் தகுதி கட்டாயமில்லை என்ற விதி மீண்டும் கல்லாமையை ஊக்குவிக்கும். அந்த பிரிவை அரசு கண்டிப்பாக நீக்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த பல்வேறு திருத்தங்கள் புதிய சட்டத்தில் இடம்பெறவில்லை.

கடைக்கோடி கிராமங்கள்
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம், லாப நோக்கம் இல்லாமல் கடைக்கோடி கிராமங்கள் வரை பேருந்து சேவை அளித்து வருகிறது ஆனால் புதிய மசோதாவின் படி,போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தால் அவை லாபத்தை மட்டுமே பார்க்கும்" இவ்வாறு கூறினார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications