இதயம் வலிக்கிறதா? இலங்கை அகதிகள் பிரச்சினை.. அமித் ஷாவை சந்திக்க தயார்..திமுக எம்பி கனிமொடி அதிரடி!
டெல்லி: இலங்கை தமிழ் அகதிகள் பிரச்னை தீருமானால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச தயார் எனவும், திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினையை ஒன்றிய அரசிடம் எழுப்பவில்லை என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது தவறானது என திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் அவையில் இன்று குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதா தொடர்பான விவாதம் நடந்தது, அதில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி, இந்த மசோதாவில் சிறப்பு பரிந்துரைகளை இணைக்க வேண்டும், இலங்கை தமிழ் அதிக அகதிகளை நீண்ட கால அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இத்தனை தமிழ் அகதிகள் வந்திருந்தார்கள் என்று தெரிவித்தார். அவர் மிகவும் நன்றாக பேசினார். அகதிகள் விஷயத்தில் கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ அதே மாதிரி தான் எனக்கும் வலிக்கிறது. அதே நேரத்தில் இலங்கை அகதிகள் விஷயத்தில் ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என சரமாரி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இலங்கை தமிழ் அகதிகள் பிரச்னை தீருமானால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச தயார் என திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்," இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினையை நான் டிசம்பர் 2009 இல் மாநிலங்களவையில் எழுப்பினேன், சட்டரீதியான விளக்கம் மற்றும் குடியுரிமை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன். 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளின் பாராளுமன்ற பதிவுகள் இதற்குச் சாட்சியமாக உள்ளன.
இது புதிய பிரச்சினை அல்ல. எங்கள் மக்களின் நலனுக்காக, எந்த புகழையும் எதிர்பார்க்காமல், நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தனிப்பட்ட சந்திப்பை நாடுவது உதவும் என்றால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்யவும் தயங்க மாட்டார்கள் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக, கடந்த 2017இல் மாநிலங்களவையில் பேசிய கனிமொழி கருணாநிதி,," இலங்கையில் நடந்த போர்களுக்குப் பிறகு, 2009-இல் இலங்கை படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) முழுமையாகத் தோற்கடித்த பிறகு போர் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இலங்கைத் தமிழர்களை மறுவாழ்வு செய்ய வேண்டும் என்று இரு நாடுகளிலும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் உண்மையில், எவ்வளவு மறுவாழ்வு நடந்துள்ளது? அவர்களுக்கு எவ்வளவு உதவி வழங்கப்பட்டுள்ளது? எத்தனை பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன? பெரிதாக எதுவும் இல்லை.
எவ்வளவு நடந்துள்ளது என்று நமக்குத் தெரியவில்லை. இலங்கையில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கவும் முடியவில்லை. இன்னமும், அங்குள்ள மக்கள் மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு வீடுகள் இல்லை. சரியான பள்ளிகள், மருத்துவ வசதிகள், தொழில், எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் - அவர்களில் பலர் இங்கே இரண்டு தலைமுறைகளாகவும், மூன்று தலைமுறைகளாகவும் இங்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
திமுக எப்போதுமே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது - இந்தியக் குடியுரிமைக்காகப் போராடி வரும் இலங்கைத் தமிழர்களில், திரும்பிச் செல்ல விரும்புவோரைச் செல்ல விடுங்கள். ஆனால் இந்த அகதிகளில் பலர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தியா அவர்களின் தாயகம். அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications