இந்தியர்கள் கை விலங்கு விவகாரம்.. விமானத்தை அனுப்பி அழைத்து வருவதற்கு என்ன? திருச்சி சிவா கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதாக தகவல் தெரிந்த பின் மத்திய அரசு என்ன செய்தது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை அறிந்த பின், ஒரு விமானத்தை அனுப்பி அவர்களை கவுரவமாக அழைத்து வருவதை யார் தடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த வேண்டும் என்பதில் டொனால்டு டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டனர்.

america trichy siva world

104 இந்தியர்களுடன் வந்த அமெரிக்கா விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அதில் ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேரும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரும், சண்டிகரைச் சேர்ந்த 2 பேரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூவரும் இருந்தனர். அந்த 104 பேரில் 19 பெண்களும், 13 மைனர்களும் இருந்துள்ளனர்.

இதனிடையே அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போட்டிருந்த வீடியோவை அமெரிக்கா வெளியிட்டது. இது இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியர்கள் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். இதுதொடர்பாக அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறினர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை திருப்பி அனுப்புவது வழக்கமான நடைமுறை தான். இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

அப்படி திருப்பி அனுப்பப்படும் போது கை, கால்களில் விலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை திமுக எம்பி திருச்சி சிவா பேசினார்.

அவர் பேசுகையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி வருவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். நாங்கள் கேட்பது என்னவென்றால், அவர்கள் சரியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்களா என்பது தான். அமெரிக்கா அரசு தரப்பில் 104 இந்தியர்கள் வெளியேற்றப்படவுள்ளார்கள் என்பதை முறையாக கூறியுள்ளார்களா?

அந்த தகவல் தெரிந்த பின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அவர்களை ஒரு விமானம் மூலம் மத்திய அரசு கவுரவமாக அழைத்து வருவதை யார் தடுத்தது? அங்கிருந்து வந்தவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு, சுமார் 14 மணி நேரம் நிற்க வைக்கப்பட்டுள்ளார்கள். இதுவொரு மனித தன்மையற்ற செயல்.

அவர்கள் அனைவரும் இந்தியர்கள். வெளியேற்றம் என்பது நியாயமாக நடந்திருக்க வேண்டும். எதற்காக ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்டது ஏன்? அப்படி வந்தவர்களை மத்திய அரசு முறையாக கையாண்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+