ராகுல் காந்திக்கு பாடம் புகட்டிய திமுக? நாடாளுமன்றத்தில் நேற்று "நடத்திய சம்பவம்!" போட்டோ பாருங்க
டெல்லி: தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த பிரச்சனை லோக்சபாவிலும் எதிரொலித்துள்ளது. லோக்சபாவில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசியபோது திமுகவின் எம்பிக்கள் ஒருவர் கூட சபையில் இல்லை. எப்போதும் ராகுல் காந்திக்கு பக்கப்பலமாக இருக்கும் திமுக எம்பிக்கள் நேற்றைய தினம் இல்லாதது கூட்டணிக்குள் குழப்பம் அதிகரித்துள்ளதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புயல் வீசி வருகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட அதிக சீட் வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் திமுகவை சீண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக மாணிக்கம் தாகூர் தினம் தினம் திமுகவை சீண்டி வருகிறார்.
ஆட்சயில் பங்கு கிடையாது
திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட் வழங்குவது, ஆட்சியில் பங்கு கொடுப்பதை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் சரியான கட்டமைப்பு இல்லாதது தான் இதற்கு காரணம் என்று திமுகவினரே சொல்கின்றனர்.
இதற்கிடையே தான் ‛இந்தியா டூடே தொலைக்காட்சியின் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியபோது, ‛ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது'' என்று கூறினார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்பதே முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
திமுகவை சீண்டும் காங்கிரஸ்
இது காங்கிரஸ் கட்சியை கோபப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாணிக்கம் தாகூர் எம்பி ‛‛மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு'' என்று கூறியுள்ளார். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் தொடர்ந்து வருகிறது.
லோக்சபாவில் ராகுல் பேச்சு
இப்படியான சூழலில் தான் நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று ராகுல் காந்தி பேசினார். பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.
‛‛பிரதமர் மோடி டிரம்புக்கு அடிபணிந்துவிட்டார். இந்தியா யாரிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்ற முடிவை டிரம்ப் எடுக்கிறார். நாட்டையே விற்றுவிட்டீர்கள். இதற்கு வெட்கமே இல்லையா?'' ராகுல் காந்தி கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்தார்.
திமுக எம்பிக்கள் இல்லை
ராகுல் காந்தியின் இந்த பேச்சின்போது திமுக எம்பிக்கள் யாரும் லோக்சபாவில் இல்லை. திமுக எம்பிக்கள் கனிமொழி, டிஆர் பாலு உள்பட திமுக எம்பிக்களின் இருக்கைகள் காலியாக இருந்தன. இது தற்போது கவனம் பெற்றுள்ளது.
ஏனென்றால் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் எப்போதும் காங்கிரஸ் மற்றும் திமுக ஒன்றாக இணைந்து செயல்படும். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி பேசும்போதெல்லாம் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் குறுக்கீடு செய்வார்கள். அப்போது திமுக எம்பிக்கள் ராகுல் காந்திக்கு பக்கப்பலமாக குரல் கொடுப்பார்கள். இதனை நாம் பலமுறை பார்த்து இருக்கலாம்.
திமுக - காங்., கூட்டணி கசப்பு
ஆனால் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசுவது மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் கூட திமுக எம்பிக்கள் லோக்சபாவில் இல்லை. நேற்று முன்தினம் தான் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீசில் திமுக எம்பிக்கள் கையெழுத்திட்டனர்.
அதுவரை சுமூகமாக இருந்த உறவு நேற்று முதல் கசக்க தொடங்கி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ராகுல் காந்தி உடனான சந்திப்புக்கு பிறகு தான் கூட்டணியில் குழப்பம் அதிகரித்துள்ளது. இந்த மீட்டிங்கிற்கு பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கூட்டணி பேச்சுவார்த்தையை சீக்கிரமே முடித்தால் நல்லது என்றார்.
லோக்சபாவில் எதிரொலித்த குழப்பம்
அதன்பிறகு ஸ்டாலின் இந்தியா டுடே நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று கூறினார். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையேயான விரிசல் என்பது நேற்று முன்தினம் முதல் அதிகமாக தொடங்கி உள்ள நிலையில் லோக்சபாவிலும் அது எதிரொலிக்கிறது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ்












Click it and Unblock the Notifications