மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அனுமதியை ரத்து செய்தாகனும்.. நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட திமுக எம்பிக்கள்!
டெல்லி: மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க அனுமதியை மத்திய பாஜக அரசு ரத்து செய்தாக வேண்டும் என்று லோக்சபாவில் திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். லோக்சபாவில் பேசிய திமுக எம்பி கனிமொழி, டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைந்தால் அரிட்டாபட்டியில் உள்ள கலாச்சார, பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது; இச்சுரங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை; ஆகையால் கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டின் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லோக்சபாவில் இன்று பேசிய திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
லோக்சபாவில் பேசிய கனிமொழி, டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைந்தால் அரிட்டாபட்டியில் உள்ள கலாச்சார, பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது; இச்சுரங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை; ஆகையால் கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். மேலும் பல்லுயிர் பெருக்கத்துக்கான முக்கிய இடம் என்பதால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதையும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.
திமுகவின் டிஆர் பாலு எம்பி பேசுகையில், தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்தை ஏற்று டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது இந்த திட்டம் என்றார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பாஜகவைப் பொறுத்தவரையில் வேதாந்தா குழுமம்தான் முக்கியம். வேதாந்தா குழுமமா? கடவுளா? என்றால் மத்தியில் ஆளும் பாஜக அரசு வேதாந்தா குழுமத்தின் பின்னால் சென்றுவிடும் நிலைமையில்தான் உள்ளது என சாடினார். அத்துடன் அரிட்டாபட்டி பகுதியில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை உள்ளது; அழகர் கோவில் உள்ளது; இத்தகைய ஆன்மீகத் தலங்களை அழித்தாக வேண்டும் என ஏன் பாஜக அரசு துடிக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார் மாணிக்கம் தாகூர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications