"வெட்கம்! வெட்கம்!" திமுக எம்பிக்கள் வெளிநடப்பு! டிவியில் போய் பாருங்க! கடுகடுத்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதத்தில் இன்று எய்ம்ஸ் மருத்துவனைக் குறித்து காரசார விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

நேற்றைய தினம் காங்கிரஸில் ராகுல் காந்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து உரையாற்றினார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து இரு தரப்பிற்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடுதலாக மொத்தம் 900 படுக்கைகள்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தமிழ்நாடு அரசுக்குக் கடன் சுமையே இல்லை.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2022 முதல் படித்து வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி.. ரூ 1627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது.. கடன் வாங்கி கட்டுகிறோமா இல்லை நிதி ஒதுக்குகிறோமா என்பது எங்கள் விருப்பம். அது எங்களுடைய கொள்கை சார்ந்த முடிவு.. தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை; நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஆக தமிழக அரசே காரணம். எனவே, மதுரை எய்மஸ் கட்டுமான தாமதத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்.
பொதுவாக 700 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன; ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. இவை தொற்று நோய் பரவல் ஏற்படும் போது பெரியளவில் உதவியாக இருக்கும்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 99 மாணவர்கள் இப்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள்" என்றார்.
அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். குறிப்பா நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசுகையில் திமுக எம்பிக்கள் வெட்கம்! வெட்கம்! எப்போது? எப்போது? என முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாடு குறித்துப் பேச நிறைய இருக்கிறது. நான் சொல்கிறேன் டிவியில் சென்று பாருங்கள்" என்று ஆக்ரோஷமாகப் பதில் அளித்தார்.
மதுரை எய்ம்ஸ் மட்டுமின்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவான பதிலை அளித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications