நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய முடியுமா? ரூல்ஸ் என்ன? அடுத்து என்ன நடக்கும்
டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரத்தைத் தொடர்ந்து நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானத்தைக் கொண்டு வரவும் திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அதற்கான நடைமுறைகள் என்ன.. இதுவரை எதாவது திமுக எம்பிக்கள் அப்படிப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலையின் மீது தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானத்தைக் கொண்டு வரவும் திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இம்பீச்மெண்ட்
1968 நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின் கீழ் தவறான நடத்தை அல்லது திறமையின்மை என்ற விதிகளின் கீழ் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இந்த இம்பீச்மெண்ட் மசோதாவை திமுக கொண்டு வர முயல்கிறது.
இந்தியாவில் பணியில் உள்ள நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது என்பது மிகப் பெரிய வேலை. ஆளும் தரப்பு உட்பட எந்தவொரு கட்சி நினைத்தாலும் அதை எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்துவிட முடியாது. அதற்கு மிகப் பெரிய ஒரு பிராசஸ் இருக்கிறது. இதற்கு மிகக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஒரே ஒரு தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு தவறான செயல்பாடு என்ற அரசியலமைப்புச் சட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அடுத்து என்ன நடக்கும்
உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது இந்தியாவில் உள்ள மிக முக்கியமான அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளில் ஒன்றாகும். இந்தச் செயல்முறை நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. பதவி நீக்கத் தீர்மானம் எந்த அவையிலும் கொண்டுவரப்படலாம், ஆனால் அதற்கு குறிப்பிடத்தக்கது. அளவுக்கு எம்பிக்கள் ஆதரவு தேவைப்படும்.
லோக்சபாவில் இதைக் கொண்டு வரக் குறைந்தது 100 எம்பிக்கள் ஆதரவு தேவை.. அதேபோல ராஜ்யசபாவில் இந்த மசோதாவைக் கொண்டு வர 50 எம்பிக்கள் ஆதரவு தேவை. அந்த எம்பிக்களின் கையெழுத்தோடு தீர்மான நோட்டீஸை வழங்க வேண்டும். மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவைக்குத் தலைவரிடம் இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். தீர்மானத்தை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை அவையின் தலைவரே முடிவு செய்வார். இந்த அதிகார நிலையே முக்கியமானது.
கமிட்டி அமைக்கப்படும்
ஒருவேளை தீர்மானத்தை அவை தலைவர் ஏற்றுக் கொண்டால்.. அதன் பிறகு மூன்று நபர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மற்றும் சட்ட நிபுணர் இருப்பார். இந்தக் குழு ஒரு விசாரணை அமைப்பைப் போலவே செயல்படும். ஆதாரங்களை ஆராய்ந்து, சாட்சிகளை விசாரிப்பார்கள். மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியிடமும் விளக்கம் கோரப்படும். அதைத் தொடர்ந்து விரிவான ரிப்போர்ட்டை இந்தக் குழு சமர்ப்பிக்கும்.
இந்த அறிக்கை மிகவும் முக்கியமானது. அதில் தான் நீதிபதி மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும். அதில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டால் முடிவு மட்டுமே தீர்மானம் அடுத்த கட்டத்திற்கு நகரும். நீதிபதி மீது தவறு உறுதி செய்யப்பட்டால் அடுத்து அந்தத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும். வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
நாடாளுமன்றம்
ஒரு நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவையில் மொத்த உறுப்பினர்களின் குறைந்தபட்சம் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் இருக்கும்போது, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேறினால், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். அதன் பிறகே குடியரசுத் தலைவர் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய உத்தரவிடுவார்.
சமீபத்தில் இதுபோல இரு பதவிநீக்க மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் அவரை பதவிநீக்கம் செய்யுமாறு 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் வழங்கினர். இதை ஏற்ற மக்களவை சபாநாயகர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஆராயக் குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிறைவேறியதே இல்லை
அதேநேரம் இந்தியாவில் நீதிபதி ஒருவரைப் பதவிநீக்கம் செய்வது மிகச் சிக்கலான நடைமுறையாகும். இந்திய வரலாற்றில் இதுவரை ஒரு நீதிபதி கூட பதவிநீக்கம் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம்












Click it and Unblock the Notifications