"கொரோனா & இன்ப்ளூயன்ஸா.." இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் பாதிப்பு..என்ன காரணம்! உயிருக்கு ஆபத்தா
சில காலமாக கொரோனாவுடன் இன்ப்ளூயன்ஸா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இன்ப்ளூயன்ஸா பாதிப்பு சில மாதங்களாக உயர்ந்து வரும் நிலையில், இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020இல் இந்தியாவில் நுழைந்த கொரோனா பாதிப்பு, அதன் பின்னர் நம்மை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளை நாம் ஏற்கனவே இழந்துவிட்டோம்
வேக்சின் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் கொரோனா பாதிப்பு இப்போது தான் குறைந்திருந்தது. உலகம் மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதனிடையே இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
கடந்த 9ஆம் தேதி நாட்டில் தினசரி பாதிப்பு 379ஆக இருந்த நிலையில், அதன் பிறகு சுமார் 3.5 மாதங்களுக்குப் பிறகு.. 10ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 400ஐ கடந்த 441ஆகப் பதிவானது. நேற்று வைரஸ் பாதிப்பு 456ஆக இருந்த நிலையில், இன்று சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு வைரஸ் பாதிப்பு 500 ஐ கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 524 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாட்டில் 3,618 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்ப்ளூயன்ஸா வேறு
கொரோனா கேஸ்களுடன் திடீரென H3N2 இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.. இது நாட்டின் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உயர்மட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.. அதில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் அதிகரிக்கும் H3N2 இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மருத்துவர் சொல்வது
இது குறித்து டாக்டர் அஜய் சுக்லா கூறுகையில், "அனைத்து வைரஸ் காய்ச்சல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் தான். சளி, லேசான இருமல் வரலாம். உங்களுக்குக் காய்ச்சல், உடல் வலி, தலைவலி இருக்கும். இவை பொதுவான அறிகுறிகள். உங்களுக்கு எந்த வைரஸ் தொற்று உள்ளது என்பதை ஆரம்பத்தில் கண்டறிவது மிகவும் கடினம். அதைக் கண்டறிய சில டெஸ்ட்களை செய்ய வேண்டும். இருப்பினும், இப்போது இந்தியாவில் H3N2 காய்ச்சல் தான் பரவி வருகிறது என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. எனவே, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

நோய் பாதிப்பு அதிகரிப்பு
ஏற்கனவே, நாம் மூன்று கொரோனா அலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு பலருக்கும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தியாவில் சமீப காலமாக இன்ப்ளூயன்ஸா பாதிப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல இன்ப்ளூயன்ஸா அறிகுறிகளும் நீண்ட காலம் நீட்டிக்கிறது. இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் 3 வாரங்கள் வரை நீடிப்பதாக நோயாளிகள் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக, பருவகால காய்ச்சல் மற்றும் இருமல் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மட்டுமே இருக்கும் நிலையில், இப்போது அது அதிகரித்துள்ளது.

அறிகுறி
கொரோனாவுடன் சேர்ந்து கடைசி இரண்டு மாதங்களாகவே இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் இன்ப்ளூயன்ஸா தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனாவுக்கும் இன்ப்ளூயன்ஸாவுக்கும் கிட்டதட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது இன்ப்ளூயன்ஸா ஏ துணை வகை H3N2 வைரஸால் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருமல், தொண்டை வலி, குமட்டல், உடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கு இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.

ஐசியு சிகிச்சை
காய்ச்சல் அதிகரித்தால் மருத்துவமனையிலும் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்படும். சிலருக்கு ஐசியு சிகிச்சை தேவைப்படும் அளவுக்கும் நிலைமை மோசமாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில நோயாளிகளுக்கு நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியும் ஏற்படுகிறது. ஏற்கனவே, மத்திய அரசும் இந்தியாவில் இருவர் இன்ப்ளூயன்ஸாவால் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும், இதனால் ஆபத்து என்று மருத்துவர்கள் இன்னும் எச்சரிக்கையைத் தரவில்லை. அதேநேரம் நோய் பரவுவதைத் தடுக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அறிவுரை
குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்கள் மற்றும் இணை நோய்களைக் கொண்டவர்களுக்கு வைரஸ் தொற்று தீவிரமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால்.. தலைநகர் டெல்லியில் ஆண்டிபயாடிக்குகளை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் தேவையில்லாமல் ஆன்டிபயாடிக்குளை சாப்பிட வேண்டும் என்றே மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்கள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும், வெளியே சென்றால் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications