யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த 3 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்!
டெல்லி: யுபிஎஸ்இ தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள்களும் மகனும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் உயர்பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படுகின்றன. இதனால் மூலம் இந்தியா முழுவதிலிருந்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த தேர்வுகள் 3 நிலைகளாக நடத்தப்படுகின்றன. அவை முதல்நிலை தேர்வு (Preliminary), முதன்மை தேர்வு (Mains), நேர்காணல் (Interview) ஆகியவை ஆகும். இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியம்.
2022 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதி முடிவுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்திலிருந்து 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்களில் 3 பேர் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகளாவர்.

மாணவி சத்ரியா கவின் 169 ஆவதுஇடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு செயலாளர் ஜகந்நாதனின் மகள்.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மை செயலர் மற்றும் ஆணையர் அதுல் ஆனந்தின் மகள் ஈசானி 290-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன், 361வது இடத்தைப் பிடித்துள்ளார்.

புலிகளுக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபித்துள்ளனர். தங்களது தந்தைகளை போல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று மக்களுக்கு சேவையாற்ற உள்ளார்கள். சென்னை எலக்ட்ரீஷயனின் மகள் ஜீஜீ தமிழகத்தில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அது போல் பொன்னேரி சார் ஆட்சியராக உள்ள ஐஸ்வரியாவின் மூத்த சகோதரி சுஷ்மிதா(26) 528-வது இடத்தை பிடித்து குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான முதன்மை தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடந்தது. நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் மே மாதம் வரை நடந்தன. இதில் 933 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சாமி அகில இந்திய அளவில் 117ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications