Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை நிறைய லட்சங்களில் சம்பளம்.. ஆனாலும் கூட இந்த ஐந்து வேலைகளை செய்ய ஆளே இல்லையாம்.. ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தக் காலத்தில் பலரும் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கை நிறையச் சம்பளம் கொடுத்தாலும் கூட சில வேலைகளுக்குச் செல்ல மக்கள் ஆர்வமாக இல்லையாம். அது என்ன வேலை.. ஏன் இந்த வேலைகளுக்குச் செல்வதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஏஐ வந்துவிட்ட நிலையில், வேலைவாய்ப்புகள் பெரியளவில் குறையலாம் என அஞ்சப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் குறையும் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பல லட்சம் சம்பளம் கொடுத்தாலும் சில வேலைகளைச் செய்ய மக்கள் ரெடியாக இல்லை.. அது என்ன வேலை.. ஏன் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

India offbeat job

எம்பால்மர்

இதில் எம்பால்மர் தான் முதல் வேலையாகும். இந்த வேலையைக் கிட்டத்தட்ட 'மரணத்திற்குப் பிந்தைய மேக்அப் மேன்' என்றே சொல்லலாம். உயிரிழந்தோர் உடல் சில காலம் வரை சிதைந்து போகாமல் இருக்க இதுபோல செய்வார்கள். உடல்கள் சிதைவுறுவதைத் தாமதப்படுத்த கெமிக்கல் மூலம் உடலைப் பதப்படுத்துவதும் முறை தான் இது. இறந்தவர்களுடன் பணிபுரிவது சங்கடமாகத் தோன்றினாலும், இந்த வேலைக்கு அமெரிக்கா- ஐரோப்பாவில் நல்ல தேவை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் பெருநகரங்களிலும் இந்த வேலைக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இந்தத் துறையில் வல்லுநர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அதிகச் சம்பளம் கிடைக்கிறது. மாதத்திற்கு ₹2 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இருப்பினும், தினசரி சடலங்களுடன் வேலை செய்ய வேண்டும் என்பதால் பலரும் இந்த வேலை செய்ய யோசிப்பார்கள். மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் இது சவாலானவை!

செல்லப்பிராணி உணவுகள்

அடுத்துச் செல்லப்பிராணி உணவுகளை டேஸ்ட் செய்வோர். உண்மையில் பலருக்கும் இதுபோல வேலை இருக்கிறதா என்பதே ஆச்சரியமாகத் தோன்றும். இது ஜோக் போலத் தோன்றினாலும், முன்னணிச் செல்லப்பிராணி உணவு நிறுவனங்கள் இந்த வேலையைத் தருகிறது. விலங்குகளுக்குத் தரப்பும் உணவுகளின் தரம், டேஸ்ட் மற்றும் எப்படி மிக்ஸ் ஆகி இருக்கிறது என்பதைச் சோதிக்க இந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். புட் சயின்ஸ் பின்னணி கொண்டவர்களுக்கு இத்துறையில் கை நிறையச் சம்பளம் காத்திருக்கிறது. ஆனால் செல்லப்பிராணி உணவைச் சுவைக்க வேண்டும் என்பதால் பலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவே யோசிக்கிறார்கள்.

டைவர்

ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல எனச் சொல்லும் நபரா நீங்கள்? அப்போ உங்களுக்குத் தான் இந்த வேலை! வளைகுடாப் பகுதிகளில் டைவிங் (Commercial Diving) செய்வோருக்கு கை நிறையச் சம்பளம் கிடைக்கிறது. ஆழ்கடலில் எண்ணெய் குழாய்களைச் சீரமைப்பது அல்லது அபாயகரமான/ நச்சுத்தன்மை கொண்ட சூழல்களில் பணிபுரிவது இவர்களின் பிரத்தியேக வேலை. உயிருக்கு ஆபத்து அதிகம் என்பதால், தாராளமாக ஊதியம் கிடைக்கும். ஒரு மாதப் பணிக்கு ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை ஈட்ட முடியும். சம்பளம் அதிகமாக இருந்தாலும் ரிஸ்க் அதிகம் என்பதால் பெரும்பாலானோர் இத்துறையைத் தவிர்த்துவிடுகின்றனர்.

இதுக்கு கூட ஆள் இல்லையா?

அதிக சம்பளம் கிடைத்தாலும், சமூகத்தால் வெறுக்கப்படும் மற்றொரு துறை, 'கழிவு மேலாண்மை நிபுணர்'. மேம்பட்ட இயந்திரங்கள்/ ரோபோ அமைப்புகள் மூலம் நச்சு/ விஷ வாயுக்களைக் கையாள்வதே இந்தத் தேவை. இதெல்லாம் ஒரு வேலையா என பலருக்கும் தோன்றும். ஆனால், உண்மையில் பல வெளிநாடுகளில் இந்த வேலைக்கு அதிகச் சம்பளம் கிடைக்கும். இருப்பினும், நச்சு வாயு என்பதாலும் கழிவு மேலாண்மை என்பதாலும் பலரும் இந்த வேலைக்குச் சேர யோசிக்கிறார்கள்.

நீங்கள் யோசிக்கவே மாட்டீர்கள்.. இதெல்லாம் ஒரு வேலை என்று.. ஆனால், நியூயார்க், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இது பரவலாக இருக்கிறது. அங்கு ஐபோன், பிளாக் ஃபிரைடே விற்பனை போன்ற நிகழ்வுகளில், நீண்ட வரிசையில் காத்திருந்தால் தான் உள்ளே முதலில் செல்ல முடியும். இன்னொரு நபருக்காக இதுபோல லைனில் காத்திருக்க ஒரு மணி நேரத்திற்கு ₹5,000 வரை கிடைக்கும். இது குறைந்த தொகை போலத் தோன்றினாலும் எதுவுமே செய்யாமல் இருக்க இந்தப் பணம் அதிகம் தான். ஆனாலும், இந்த வேலைக்கும் கூட அதிகப் பேர் ரெடியாக இல்லை என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+